Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக்..தங்கம் வென்ற வீரர்!மரத்தடியில் தூங்கிய அவலம்!

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் தங்கம் வென்ற இத்தாலி வீரர் தாமஸ் செக்கோன், ஒரு பூங்காவில் மரத்திற்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பாரீஸ் ஒலிம்பிக் 2024:

கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை சீனா 51 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் மற்றும் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 3 வெண்கலப்பதக்கங்களுடன் 58 வது இடத்தில் உள்ளது.

Continues below advertisement

மரத்தடியில் தூங்கிய வீரர்:

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் தங்கம் வென்ற இத்தாலி வீரர் தாமஸ் செக்கோன், ஒரு பூங்காவில் மரத்திற்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் விளையாட்டு கிராமத்தில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் அறைகள் மிக மோசமாக இருப்பதாகவும், அங்கு தங்கும் வசதிகள் குறித்தும் புகார் தெரிவித்துள்ளார். இதனிடையே கிராமத்திற்கு அருகில் இருக்கும் பூங்காவில் உள்ள மரத்தடியில் வெள்ளை டவலை விரித்து உறங்கியுள்ளார் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற தாமஸ் செக்கோன்.

அவர் இப்படி உறங்குவதை சவுதி அரேபியா படகோட்டும் வீரர் ஹுசைன் அலிரேசா புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி உள்ளது. ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற வீரர்களுக்கான வசதியை அந்தந்தத நாடுகள் உறுதிபடுத்த வேண்டும் என்று கோரிக்கையை நெட்டிசன்கள் வைத்துள்ளனர்.

வெப்பத்திற்கும் சத்தத்திற்கும் இடையில் போராடுகிறேன்:

முன்னதாக ஒலிம்பிக் கிராமத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதாக இந்திய வீரர்கள் கூறியிருந்த நிலையில் அவர்களுக்கு 40 ஏசிகளை இந்திய விளையாட்டு அமைச்சகம் வாங்கி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இத்தாலியின் தாமஸ் செக்கோன் பேசுகையில், "பல விளையாட்டு வீரர்கள் இந்த காரணத்தைக் கூறி தான் வெளியே செல்கின்றனர்.

இது ஒரு சாக்கு அல்ல, இது அனைவருக்கும் தெரியாத உண்மை. வழக்கமாக, நான் வீட்டில் இருக்கும்போது எப்போதும் மதியம் தூங்குவேன். இங்கே நான் உண்மையில் வெப்பத்திற்கும் சத்தத்திற்கும் இடையில் போராடுகிறேன்"என்று வேதனைபட கூறியுள்ளார்.

 

Continues below advertisement