Paris Olympics 2024 Matches Today, august 5th: பாரிஸ் ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில், அமெரிக்கா சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். எட்டு நாட்களுக்கான போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் அமெரிக்க முதலிடத்தை பிடித்துள்ளது.
அதன்படி, 19 தங்கம், 26 வெள்ளி மற்றும் 26 வெண்கல பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 19 தங்கம் உட்பட 45 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 12 தங்கம் உட்பட 44 பதக்கங்களுடன் ஃப்ரான்ஸ் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களுடன் 57வது இடத்தை பிடித்துள்ளது.
பேட்மிண்டன் போட்டிய்ல் றுதி போட்டிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் லக்ஷயா சென், நேற்ரு அரையிறுதியில் தோல்வியை தழுவினார். அதேநேரம், ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி, ஷூட் அவுட் முறையில் இங்கிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:
வ.எண் | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | அமெரிக்க | 19 | 26 | 26 | 71 |
2 | சீனா | 19 | 15 | 11 | 45 |
3 | ஃப்ரான்ஸ் | 12 | 14 | 18 | 44 |
4 | ஆஸ்திரேலியா | 12 | 11 | 8 | 31 |
5 | இங்கிலாந்து | 10 | 12 | 15 | 37 |
6 | தென்கொரியா | 10 | 7 | 7 | 24 |
7 | ஜப்பான் | 9 | 5 | 10 | 24 |
8 | இத்தாலி | 7 | 10 | 5 | 22 |
9 | நெதர்லாந்து | 6 | 5 | 4 | 15 |
10 | ஜெர்மனி | 5 | 5 | 2 | 12 |
இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:
துப்பாக்கி சுடுதல்: ஸ்கீட் கலப்பு அணி தகுதி (அனந்த்ஜீத் சிங் நருகா, மகேஸ்வரி சவுகான்) | மதியம் 12:30 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்: 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் ஆண்கள் இறுதிப் போட்டி (தகுதிக்கு உட்பட்டது) | மதியம் 1 மணி முதல்
டேபிள் டென்னிஸ்: ஆண்கள் & பெண்கள் அணி சுற்று 16 | மதியம் 1:30 மணி முதல்
தடகளம்: பெண்கள் 400மீ சுற்று 1 (கிரண் பஹல்) | மாலை 3:25 முதல்
படகோட்டம்: பெண்களுக்கான டிங்கி ரேஸ் 9|10 (நேத்ரா குமணன்) | மாலை 3:45 மணி முதல்
பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் வெண்கல பதக்கத்திற்கான போட்டி (லக்ஷய சென்) | மாலை 6 மணி முதல்
படகோட்டம்: ஆண்களுக்கான டிங்கி ரேஸ் 9|10 (விஷ்ணு சரவணன்) | மாலை 6:10 மணி முதல்
மல்யுத்தம்: பெண்களுக்கான 68 கிலோ ரவுண்ட் ஆஃப் 16 (நிஷா தஹியா) | மாலை 6:30 மணி முதல்
மல்யுத்தம்: பெண்களுக்கான 68 கிலோ காலிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 6:30 மணி முதல்
தடகளம்: ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் சுற்று 1 (அவினாஷ் சேபிள்) | இரவு 10:34 முதல்
மல்யுத்தம்: பெண்களுக்கான 68 கிலோ அரையிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | அதிகாலை 1:10 மணி முதல்