பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் மனு பாக்கர் 3வது பதக்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் தோல்வி அடைந்தார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.


ஜஸ்ட் மிஸ் ஆன பதக்கம்:


ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதலில் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதேபோல்10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இருவரும் வெண்கலம் வென்று அசத்தி10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இருவரும் வெண்கலம் வென்று அசத்தினர்.


இச்சூழலில் தான் இன்று (ஆகஸ்ட் 3) 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் அவர் ஏமாற்றம் அளித்தார். 5 வது சுற்று வரை வந்த மனு பாக்கர் கடைசி இரு ஷாட்களில் பதக்கத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


3 முறை இறுதிச்சுற்று..


இன்றைய போட்டியில் மனு பாக்கர் பதக்கம் வெல்லாமல் தோல்வி அடைந்தாலும் அவர் இந்த ஒலிம்பிக் தொடரில் 3 முறை இறுதிச் சுற்றுவரை சென்றார். அதேபோல் ஒரே ஒலிம்பிக்கில் அதிக முறை அதாவது இரண்டு முறை பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற பெருமையும் அவர் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.






இன்றைய போட்டியில் மனு பாக்கர் தோல்வி அடைந்தாலும் அவர் இந்தியாவிற்காக இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்று கொடுத்ததை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த ஒலிம்பிக்கில் 3 முறை இறுதிச்சுற்றுவரை சென்று தங்கம் வெல்ல முடியாமல் போனது குறித்து மனு பாக்கர் வேதனை தெரிவித்த நிலையில் அவருக்கு ஆறுதலாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.