Paris Olympics: நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.


வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்:


பாரிஸ் ஒலிம்பிக் 2024ன் 14வது நாளில் இந்தியா மேலும் ஒரு பதக்கத்தை கைப்பற்றியது. ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் வெண்கலப் பதக்கப் போட்டியில், இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் பதக்கம் வென்று அசத்தினார். 2008 கோடைகால விளையாட்டுப் போட்டியிலிருந்து ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் மல்யுத்தத்தில் இருந்து குறைந்தபட்சம் ஒரு பதக்கமாவது வரும் என்ற போக்கை இந்திய தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதாவது கடந்த 5 ஒலிம்பொக் போட்டிகளிலும், மல்யுத்த பிரிவில் இருந்து இந்தியா குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது கைப்பற்றி வருகிறது. இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அமன் ஷெராவத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.






பதக்கப் பட்டியலில் இந்தியா:


அமன் ஷெராவத்தின் வெற்றியின் மூலம்  இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அதில் 5 பேர் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் நீரஜ் சோப்ரா மட்டும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கப் போட்டிகள் கிட்டத்தட்ட முடிக்கிறது. பல இந்திய விளையாட்டு வீரர்கள் வெவ்வேறு பிரிவுகளில் நான்காவது இடத்தைப் பிடித்தது பதக்க வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டனர். தற்போது ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா, 69வது இடத்தில் உள்ளது.


அதிதி அசோக், திக்ஷா தாகர் ஆகியோர் கோல்ஃப் விளையாட்டில் களமிறங்கினாலும், அந்த நிகழ்வில் பதக்க வாய்ப்பு இருண்டதாகவே தெரிகிறது.  76 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் ரீத்திகா ஹூடாவுடன் களமிறங்க உள்ளார்., ஆனால் புள்ளிவிவரங்கள் முதல் போட்டியில் அவரது எதிரிக்கு சாதகமாக இருக்கிறது. ஏதேனும் மேஜிக் நிகழ்த்தி அவர் பதக்கம் வெல்வாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். நாளையும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா:


33 தங்கம், 39 வெள்ளி மற்றும் 39 வெண்கல பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைதொடர்ந்து, 33 தங்கம், 27 வெள்ளி மற்றும் 23 வெண்கல பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. 18 தங்கம், 16 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.