பாரீஸ் ஒலிம்பிக் 2024:
கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆகஸ்ட் 3) துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் மனு பாக்கர் 3வது பதக்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் தோல்வி அடைந்தார்.
வாய்ப்பை இழந்த பஜன் கவுர்:
இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் மகளிருக்கான தனிநபர் எலிமினேஷன் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பஜன் கவுர் இந்தோனேசியாவைச் சேர்ந்த தியானந்தா சொய்ருனிதாவிடம் தோல்வி அடைந்து காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளார்
இதே போன்று மற்றொரு போட்டியில் தீபிகா குமாரி ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் க்ரோப்பனை எதிர்கொண்டார். இதில் அவர் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். தற்போது அவர் விளையாடி வருகிறார்.
மேலும் படிக்க:Watch Video: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனையிடம் சக வீரர் காதல் ப்ரபோஸ் - ஓகே சொன்னாரா?
மேலும் படிக்க:Paris Olympics 2024: ஜஸ்ட் மிஸ் ஆன பதக்கம்..சோகத்தில் மனு பாக்கர்! ரசிகர்கள் ஆறுதல்