பாரீஸ் ஒலிம்பிக் 2024:


உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளான ஒலிம்பிக், இந்த முறை பாரிஸில் நடைபெறுகிறது. இது 33வது ஒலிம்பிக் போட்டியாகும். இந்த போட்டி பல வரலாற்று நிகழ்வுகளுடன் தொடங்கியுள்ளது. அதாவது ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்த போட்டியில்தான் ஆண் வீரர்களும், பெண் வீராங்கனைகளும் சம அளவில் பங்கேற்றுள்ளனர்.


அதாவது மொத்தம் 10,500 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றிருக்கின்றனர். இதில் வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் உள்ளனர் .இந்தியா சார்பில் 117 வீரகள் விளையாடுகின்றனர். அந்த வகையில் இன்று துப்பாக்கிச் சுடுதல், படகுபோட்டி, டென்னிஸ்,பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி,குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. 


இந்திய வீரர்கள் ஏமாற்றம்:


இந்நிலையில் தற்போது நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்துள்ளனர்.அதன்படி ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சரப்ஜோத் சிங், சீமா அர்ஜூன் சிங்க் ஆகியோர் தகுதி சுற்றில் இருந்து வெளியேறியுள்ளனர். இது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.