அமெரிக்காவை முந்திய சீனா:


பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை சீனா முந்தியது. 39 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் ஆட்டத்தின் இறுதி நாளான இன்று சீனா முதலிடத்தைப் பிடித்தது. மறுபுறம், அமெரிக்கா மொத்தம் 122 பதக்கங்களை வென்றது, ஆனால் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். அமெரிக்காவின் மொத்த பதக்கங்கள் சீனாவை விட அதிகம். ஆனால் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.


போட்டியை நடத்திய பிரான்ஸின் நிலை என்ன?


பாரீஸ் விளையாட்டுப் போட்டியில் ஆஸ்திரேலியா மொத்தம் 50 பதக்கங்களை வென்றது. அதன்படி, 18 தங்கம், 18 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அந்தவகையில் ஆஸ்திரேலியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், பதக்கப் பட்டியலில் ஜப்பான் நான்காவது இடத்தில் உள்ளது.


ஜப்பான் 18 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்றுள்ளது. அதேபோல், போட்டியை நடத்தும் பிரான்ஸும் முதல் 5 இடங்களில் உள்ளது. 16 தங்கம், 24 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் பிரான்ஸ் பதக்கப் பட்டியலில் முதல்-5 இடத்தில் உள்ளது. மறுபுறம், 14 தங்கம், 22 வெள்ளி மற்றும் 27 வெண்கலம் என மொத்தம் 63 பதக்கங்களை வென்ற பிரிட்டன் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது.


இந்தியா 71 வது இடம்:






பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இந்த முறை சொதப்பியது என்றே சொல்ல வோண்டும். இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலத்துடன் மொத்தம் 6 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 71வது இடத்தை பிடித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்றன. இதில் 91 நாடுகள் பதக்கங்கங்களை வென்றுள்ளன. மீதம் உள்ள நாடுகள் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Wayanad Landslide: வயநாடு மக்களுக்கு நிதியுதவி அளித்த செஸ் மாஸ்டர் டி குகேஷ்! குவியும் பாராட்டு


மேலும் படிக்க: Paris Olympics 2024: ஒலிம்பிக்கிற்கான ரூ.470 கோடி வீணா? 32 ஆண்டுகளில் இல்லாத நிலை, எதிர்பார்ப்புகள் பலித்ததா?