பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கியது. இதில் 27 தங்கபதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 26 தங்கபதக்கங்களுடன் சீனாவும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நான்காவது இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இடம் பிடித்து உள்ளன. இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் இந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றாலும் இந்தியா சார்பில் 3 வெண்கலப்பதக்கங்கள் மட்டும் தான் கிடைத்திருக்கிறது.
இதனிடையே மகளிர் மல்யுத்த பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முதல் தங்கப்பதக்கத்தை இந்தியாவிற்காக வென்றுகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டி நடைபெறுவதற்கு முன்னர் 50 கிலோவை விட அவர் 100 கிராம் அதிகம் உள்ளதாக கூறி அவரை ஒலிம்பிக் சம்மேளனம் தகுதி நீக்கம் செய்தது. இதனால் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வினேஷ் போகத் சர்வதேச மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இச்சூழலில் தான் இந்தியாவிற்கான தங்கப்பதக்கத்தை நீரஜ் சோப்ரா நிச்சயம் வென்று கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே நீரஜ் சோப்ராவிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ரிஷப் பண்ட் அறிவித்த பரிசு:
இந்நிலையில் தான் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் பரிசு ஒன்றை தருவதாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள சமூக வலைதளபதிவில், “நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றால் எனது ட்விட்டை லைக் செய்து அதிகமாக கமெண்ட் செய்யும் நபர்களைத் தேர்ந்தெடுத்து, அதில் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 1,00,089 ரூபாய் ரொக்கமாக நான் பரிசு தருகிறேன்.
என்னுடைய கவனத்தை ஈர்க்கும் அடுத்த 10 பேருக்கு நான் இலவச விமான டிக்கெட்டுகளை வாங்கித் தருகிறேன். என்னுடைய சகோதரன் நீரஜ் சோப்ராவுக்காகவும் நமது இந்தியாவுக்காகவும் ஆதரவு அளிப்போம்"என்று கூறியுள்ளார்.