பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கியது. இதில் 27 தங்கபதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 26 தங்கபதக்கங்களுடன் சீனாவும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நான்காவது இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இடம் பிடித்து உள்ளன.


இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் இந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றாலும் இந்தியா சார்பில் 3 வெண்கலப்பதக்கங்கள் மட்டும் தான் கிடைத்திருக்கிறது. இச்சூழலில் தான் ஈட்டி எறிதல் பிரிவில் இன்று இரவு நீரஜ் சோப்ரா இறுதி போட்டியில் விளையாட உள்ளார். இதில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா சார்பில் முதல் தங்கத்தை இந்த ஒலிம்பிக்கில் வெல்வார். அதேபோல் மற்றொரு போட்டியான ஹாக்கியில் இந்திய அணி இன்று (ஆகஸ்ட் 8) விளையாடியது.


வெண்கலம் வென்ற இந்திய அணி:


அதன்படி தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களுக்கான போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இன்றைய போட்டியில் வெண்கலப்பதக்கத்தை எதிர் நோக்கி களம் இறங்கியது. அந்தவகையில் ஸ்பெயினை இந்திய அணி எதிர்கொண்டது. மேலும் தன்னுடைய கடைசி ஹாக்கி தொடரில் முன்னாள் கேப்டனும், கோல் கீப்பருமான பி ஆர் ஸ்ரீஜேஸ் களம் இறங்கியதால் ஆரம்பத்தில் இருந்தே போட்டியின் மீது எதிர்பார்ப்பு நிலவியது.






முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. இரண்டாம் பாதி முடிவில் இரு அணிகளும் 1 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமமாக முடித்தன.


இந்திய அணியின் ஆக்ரோசத்துடன் விளையாடி மூன்றாவது பாதியை தங்கள் வசப்படுத்தினார்கள். ஆட்ட நேர முடிவில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் கடந்த 1972 க்கு பிறகு இந்திய ஹாக்கி அணி அடுத்தடுத்தடுத்து ஒலிம்பிக் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.