பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்க உள்ளது. அந்தவகையில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 329 நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
32-க்கும் அதிகமான விளையாட்டுகள் நடக்க இருக்கின்றன. இச்சூழலில் இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்ற நாடுகள் மற்றும் எத்தனை பதக்கங்களை அவை வென்றன என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா:
ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரை கோடை மற்றும் குளிர்கால விளையாட்டுகளில் அமெரிக்கா 3,105 பதக்கங்களை வென்றுள்ளது. கோடைகால ஒலிம்பிக்கில், அமெரிக்கா 2,655 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடுகளில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
1904 ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் 239 பதக்கங்களுடன், ஒரே ஒலிம்பிக் பதிப்பில் அதிக பதக்கங்களை வென்ற அமெரிக்கா என்ற சாதனையையும் அமெரிக்கா பெற்றுள்ளது. ஒரே ஒலிம்பிக்கில் (1984 லாஸ் ஏஞ்சல்ஸில் 83 தங்கம்) வென்ற அதிக தங்கப் பதக்கங்கள் என்ற சாதனையை அமெரிக்கா வைத்துள்ளது.
கோடைக்கால மற்றும் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுடன், ஜெர்மனி 1,211 பதக்கங்களுடன் (384 தங்கம்) அமெரிக்காவுக்குப் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் சோவியத் யூனியன் 1,204 (473 தங்கம்) உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர் யார்?
அமெரிக்காவின் முன்னாள் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 2004 மற்றும் 2016 க்கு இடையில் 28 பதக்கங்களுடன் சாதனை படைத்துள்ளார். அவர் பெற்ற 23 பதக்கங்கள் தங்கப் பதக்கங்களாகும், இது ஒலிம்பிக்கில் தனிநபர் ஒருவர் வென்ற அதிக தங்கப் பதக்கங்களின் சாதனையாகும்.
ஒலிம்பிக்கில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது?
24 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 35 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவின் சிறந்த செயல்திறன் டோக்கியோ 2020 ஒலிம்பிக் தான். இதில் இந்தியா ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை வென்றது.
நாடு வாரியாக வென்ற ஒலிம்பிக் பதக்கங்கள் (கோடை மற்றும் குளிர்கால விளையாட்டுகள் இணைந்து):
நாடு |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
மொத்தம் |
அமெரிக்கா |
1229 |
1000 |
876 |
3105 |
சோவியத் ஒன்றியம் |
473 |
376 |
355 |
1204 |
ஜெர்மனி |
384 |
419 |
408 |
1211 |
சீன மக்கள் குடியரசு |
384 |
281 |
235 |
900 |
இங்கிலாந்து |
325 |
351 |
359 |
1035 |
பிரான்ஸ் |
312 |
336 |
392 |
1040 |
இத்தாலி |
299 |
278 |
308 |
885 |
இரஷ்ய கூட்டமைப்பு |
290 |
243 |
246 |
779 |
ஸ்வீடன் |
233 |
245 |
262 |
740 |