பாராலிம்பிக் 2024:
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 84 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் பதக்கம் ஏதும் வெல்ல வில்லை என்றாலும் இன்றைய போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கான சூழல் நிலவுகிறது. அதன்படி இன்றைய போட்டியின் அட்டவணையை பார்ப்போம்:
பாரா பேட்மிண்டன்:
பிற்பகல் 12 மணி: பெண்கள் ஒற்றையர் SL3 குரூப் பிளே ஸ்டேஜில் மானசி ஜோஷி vs ஒக்ஸானா கோசினா (உக்ரைன்)
பிற்பகல் 1:20: ஆடவர் ஒற்றையர் SL3 குரூப் பிளே ஸ்டேஜில் மனோஜ் சர்க்கார் vs மோங்கான் புன்சன் (தாய்லாந்து)
பிற்பகல் 2 மணி: ஆண்கள் ஒற்றையர் SL3 குரூப் பிளே ஸ்டேஜில் நிதேஷ் குமார் vs ஜியான்யுவான் யாங் (சீனா)
பிற்பகல் 2:40: சுஹாஸ் லலினகெரே யதிராஜ் vs கியுங் ஹ்வான் ஷின் (கொரியா) ஆண்கள் ஒற்றையர் SL4 குரூப் பிளே ஸ்டேஜ்
மாலை 4:40 பெண்கள் ஒற்றையர் SL4 குரூப் பிளே ஸ்டேஜில் பாலக் கோஹ்லி vs லியானி ராத்ரி ஒக்டிலா (இந்தோனேசியா)
மாலை 7:30 பெண்கள் ஒற்றையர் SU5 குரூப் பிளே ஸ்டேஜில் துளசிமதி முருகேசன் vs பீட்ரிஸ் மொன்டீரோ (போர்ச்சுகல்)
இரவு 8:10 ஆண்கள் ஒற்றையர் SH6 குரூப் பிளே ஸ்டேஜில் சிவராஜன் சோலைமலை vs மான் கை சூ
இரவு 8:50 பெண்கள் ஒற்றையர் SH6 குரூப் பிளே ஸ்டேஜில் நித்யா ஸ்ரீ சுமதி சிவன் vs யி-லின் காய் (சீன தைபே)
இரவு 10:50 ஆண்கள் ஒற்றையர் SH6 குரூப் பிளே ஸ்டேஜில் கிருஷ்ணா நகர் vs மைல்ஸ் க்ராஜெவ்ஸ்கி
இரவு 2:10 (31 ஆகஸ்ட்): கலப்பு இரட்டையர் SL3-SU5 குரூப் பிளே ஸ்டேஜில் நிதேஷ் குமார்/துளசிமதி முருகேசன் vs லூகாஸ் மஸூர்/ஃபாஸ்டின் நோயல் (பிரான்ஸ்)
இரவு 12:10 (31 ஆகஸ்ட்): கலப்பு இரட்டையர் SL3-SU5 குரூப் பிளே ஸ்டேஜில் சுஹாஸ் லலினகெரே யதிராஜ்/பாலக் கோஹ்லி vs ஹிக்மத் ராம்தானி/லீனி ராத்ரி ஒக்டிலா (இந்தோனேசியா)
இரவு 01:30 (31 ஆகஸ்ட், சனிக்கிழமை): கலப்பு இரட்டையர் SH6 குரூப் பிளே ஸ்டேஜில் சிவராஜன் சோலைமலை/நித்யா ஸ்ரீ சுமதி சிவன் vs நத்தாபோங் மீச்சை/சாய் சாயாங் (தாய்லாந்து)
மாலை 3:15 பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 இறுதிப் போட்டியில் அவனி லெகாரா, மோனா அகர்வால் (தகுதி பெற்றால்)
மாலை 5 மணி: கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH2 தகுதிப் பிரிவில் ஸ்ரீஹர்ஷா தேவரட்டி ராமகிருஷ்ணா
மாலை 5:30 ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 இறுதிப் போட்டியில் ருத்ரன்ஷ் கண்டேல்வால், மணீஷ் நர்வால்(தகுதி பெற்றால்)
மாலை 7:45 கலப்பு 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH2 இறுதிப் போட்டியில் ஸ்ரீஹர்ஷா தேவரட்டி ராமகிருஷ்ணா(தகுதி பெற்றால்)
பாரா தடகளம்
பிற்பகல் 1:30: பெண்கள் வட்டு எறிதலில் ஜோதி கரம், சாக்ஷி கசானா - F55 இறுதிப் போட்டி
மாலை 4:45 பெண்களுக்கான 100 மீ - T35 இறுதிப் போட்டியில் ப்ரீத்தி பால்
இரவு 12:22 ஆண்களுக்கான ஷாட் புட்டில் மனு - F37 இறுதிப் போட்டி
பாரா ரோயிங்
பிற்பகல் 3 மணி: அனிதா/நாராயண கொங்கனப்பள்ளி PR3 கலப்பு இரட்டை ஸ்கல்ஸ் ஹீட்ஸ்
பாரா வில்வித்தை
பிற்பகல் 3:03: சரிதா vs நூர் ஜன்னடன் அப்துல் ஜலீல் (மலேஷியா) பெண்கள் தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன் 1/16 எலிமினேஷன்
பாரா சைக்கிள் ட்ராக்
மாலை 4:24 ஆண்களுக்கான C2 3000m தனிநபர் பர்சூட் தகுதிப் போட்டியில் அர்ஷத் ஷேக்