பாரீஸ் ஒலிம்பிக் 2024:


கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 206 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றாலும் சீனா மற்றும் அமெரிக்கா தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை 3 பதக்கங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.


மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஓரளவிற்கு ஆறுதலாக இருந்தாலும் ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாகவே இருக்கிறது. அதாவது இந்தியா சார்பில் இந்த முறை மொத்தம் 117 வீரர்கள் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றும் இதுவரையில் ஒரு தங்க பதக்கம் கூட வெல்லாமல் இருப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது.


அதேபோல் பாரீஸ் இந்திய வீரர்கள் தங்குவதற்கென்றே ஒலிம்பிக் சார்பில் ஒலிம்பிக் கிராமம் என்ற ஒன்று கொடுக்கப்பட்டது. ஆனால் அங்கு வெப்பமான சூழலில் சில இடங்களில் நிலவுதாகவும் அங்கு தங்குவதற்கு சில வீரர்ளுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்பட்டது. 


40 ஏசிகளை வழங்கிய இந்திய தூதரகம்:


இந்த நிலையில் தான் தற்போது பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்திற்கு 40 ஏசிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் வசதியாக தங்குவதற்கும், ஓய்வுநேரத்தை சிறப்பாக அனுபவிக்க முடியும்.


விளையாட்டு அமைச்சகம் SAI, IOA மற்றும் பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிறகு போர்ட்டபிள் ஏசிகளை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஏசிகளின் அனைத்து செலவையும் விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க:Watch Video: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனையிடம் சக வீரர் காதல் ப்ரபோஸ் - ஓகே சொன்னாரா?


 


மேலும் படிக்க:Paris Olympics 2024: ஜஸ்ட் மிஸ் ஆன பதக்கம்..சோகத்தில் மனு பாக்கர்! ரசிகர்கள் ஆறுதல்