பாரீஸ் ஒலிம்பிக் 2024:


விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா, யூரோ கோப்பை மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் காத்திருக்கும் மற்றொரு முக்கியமான தொடர் பாரீஸ் ஒலிம்பிக் 2024 தான்.


ரசிர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தொடர் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் தமிழ்நாடு சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்கில் 400.மீ தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்து கொள்ள உள்ளர் வித்யா ராம்ராஜ். யார் இவர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்;


வித்யா ராம்ராஜ் யார்?


கடந்த 1998 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி கோவையில் சாதாரண ஒரு ஆட்டோ ஒட்டுநரின் மகளாக பிறந்தவர் தான் வித்யா. இவருடன் பிறந்தவர நித்யா. இருவரும் இரட்டை சகோதரிகள். இந்த சகோதரிகள் 7 ஆம் வகுப்பு படிக்கும் போதே ஈரோட்டில் உள்ள பெண்கள் விளையாட்டு பள்ளியில் சேர்த்துவிட்டார். அப்போது முதல் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்த இருவரும் பின்னர் தடகள் வீராங்கனைகளாக அசத்த தொடங்கினர் கொரோனாவிற்கு பிறகு நித்யா தனது குடும்பத்தோடு சென்னைக்கு வந்து விட்டார்.


2017 ஆம் ஆண்டு வரை 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று வந்த வித்யா பின்னர் 400 மீட்டர் தடைகள் தாண்டுதல் போட்டியில் கவனம் செலுத்த தொடங்கினார். தடைகள் தாண்டுவதோடு 400 மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் வகையில் வித்யாவின் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்தார். தற்போது வித்யா 400 மீட்டர் தடைகள் தாண்டுதல் மற்றும் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக கடந்த ஒரு வருட காலமாக வித்யா 400 மீட்டர் தடைகள் தாண்டுதலில் தனது தனித்திறனை உயர்த்தி வருகிறார்.


2022 ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் விதயா 56.57 வினாடிகளை வெற்றி பெற்றார்.ஜூன் 2023 ஆம் ஆண்டு மா நிலங்களுக்கு இடையேயான சாம்ப்பியன்ஷிப் போட்டியில் பந்தய நேரத்தை 56.01 வினாடிகளில் கடந்திருந்தார். தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி சண்டிகரில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில், 400 மீ தடைகள் தாண்டுதல் பிரிவில், இலக்கை 55.41 வினாடிகளில் கடந்த வித்யா ராம்ராஜ் பி.டி.உஷாவின் சாதனையை நெருங்கி இருந்தார்.


வெறும் 0.01 வினாடி நேர இடைவெளியில் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்ய முடியாமல் தவறவிட்டார் வித்யா. இதனிடையே கடந்த ஆண்டு பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்தார். இச்சூழலில் தான் இந்த ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளார் வித்யா ராம்ராஜ்.