Paris Paralympics: பாரிஸ் பாராலிம்பில் வில்வித்தை பிரிவில் தங்கம் வென்று, இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் புதிய சாதனை படைத்துள்ளார்.


தங்கம் வென்ற தரம்பீர்:


ஆடவர்களுக்கான F51 கிளப் த்ரோ பிரிவில், இந்திய வீரர் தரம்பீர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் பந்தினை 34.92 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், கிளப் த்ரோ போட்டியில் ஆசிய அளவில் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அதேபோட்டியில் சக இந்திய வீரரான பிரனவ் சர்மா, 34.59 மீட்டர் தூரத்திற்கு பந்தினை வீசி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.






வில்வித்தையில் தங்கம்:


இதனிடையே, ஆடவர்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் என இரண்டு போட்டிகளிலும் சேர்த்து, இந்தியர் ஒருவர் வில்வித்தை பிர்வில் தங்கம் வெல்வது என்பது இதுவே முதல்முறையாகும். இறுதிப்போட்டியில், போலந்து வீரர் லீகஸ் என்பவரை, 6-0 என மிக எளிதாக வீழ்த்தி ஹர்வ்ந்தர் பதக்கத்தை பெற்றார். இவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 






பதக்கப் பட்டியல் நிலவரம்:


தற்போது வரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம், 24 பதக்கங்களுடன் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 62 தங்கம் உட்பட 135 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 33 தங்கம் உட்பட 74 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 25 தங்கம் உட்பட 63 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.


கடந்த டோக்யோ பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என, மொத்தம் 19 பதக்கங்களை வென்றது. பாராலிம்பிக்கில் ஒரு எடிஷனில் இந்தியா அதிக தங்கம் வென்றதே, டோக்கியோ போட்டியில் தான். இந்த முறை அந்த எண்ணிக்கை சமன் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய சாதனை படைக்கும் வாய்ப்பும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. 


ALSO READ | The Goat Twitter Review : தெறிக்கவிட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விஜய்...தி கோட் பட ட்விட்டர் விமர்சனம்