பாரீஸ் ஒலிம்பிக் தொடர்:


பாரீஸ் ஒலிம்பிக் தொடர் கடந்த 11 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. நேற்றுடன் இந்த தொடர் முடிந்தது. முன்னதாக ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கம் வென்றார். நேற்று நாடு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு பாகிஸ்தான் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான  'ஹிலால்-இ-இம்தியாஸ்' விருதை வழங்கி கவுரவிக்க உள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு பணம் மற்றும் பரிசுகளை அளித்து வருகின்றனர்.


எருமை மாட்டை பரிசாக வழங்கிய மாமனார்:


ஆனால் அவரது மாமனார் அவருக்கு அளித்துள்ள வித்தியாசமான பரிசு தான் இப்போது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. அதாவது நதீமின் மாமனார் அவருக்கு எருமை மாடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.


இதுகுறித்து வீரரின் மாமனார் கூறியதாவது, “எருமை மாட்டை பரிசளிப்பது என்பது ஒருவருக்கு அதிக செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். எங்கள் கிராமத்தில் இதுதான் நடைமுறை. அதனால், எனது மருமகனுக்கு எருமை மாட்டை பரிசளித்தேன்." என்று கூறியுள்ளார்


நதீமின் குடும்ப வாழ்க்கை:


பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கானேவால் கிராமத்தைச் சேர்ந்த நதீம், வாஸ் என்பவரின் இளைய மகள் ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. குடும்பத்தையும் ஈட்டி எறிதலையும் இரு கண்களாக பாவித்து வருகிறார் நதீம்.


 


மேலும் படிக்க:  Paris Olympics 2024: நாடு திரும்பிய தங்கமகன் அர்ஷத் நதீம்..பாகிஸ்தான் அரசு அறிவித்த உயரிய விருது!


மேலும் படிக்க:  Sanju Samson: ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன்? சஞ்சு சாம்சன் ஓபன் டாக்