ஐசிசி உலகக்கோப்பை 2023 தொடர் நாளை  பிரமாண்டமாக தொடங்கியது. இதில் முதல் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது


இச்சூழலில், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வந்த அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் ”வட்ட மேசை நிகழ்வு” அக்டோபர் 4-ஆம் தேதி நடந்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த வட்ட மேசை நிகழ்வில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள பத்து அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டனர். 


அதேநேரம் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிரி நாடாக பார்க்கக்கூடிய பாகிஸ்தான்  அனியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் மீது தான் அனைவரின் பார்வையும் விழுந்தது. 


சில கேப்டன்கள் இருவர் அமரும்  இருக்கைகளில் ஒன்றாக அமர்ந்து இருந்தனர். அதில், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா மட்டும் தனியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.


அதில் அவர் அமர்ந்து இருந்தபடியே தூங்கி வழிய ஆரம்பித்து விட்டார். அது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் மீம்ஸாக வலம் வருகிறது. அதை தற்போது இந்த தொகுப்பில் பார்ப்போம்:










Reletable 🥲#TembaBavuma #WorldCup #ICCCricketWorldCup #kanewilliamson pic.twitter.com/D0vbX7OPPB


— Rishii (@Rishikivani) October 4, 2023