TNHRCE Recruitment 2023: ரூ.52 ஆயிரம் சம்பளம்...! திருச்செந்தூர் கோயிலில் வேலைவாய்ப்பு..! முழு விவரம்

TNHRCE Recruitment 2023: திருச்செந்தூர் கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.   காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

Continues below advertisement

பணி விவரம்:

உதவி மின் கம்பியாளர் 

கல்வித் தகுதி

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின் கம்பி பணியாளர் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து ‘H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இதற்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு Pay Matric level 18-ன் படி ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும். 

இதர நிபந்தனைகள்

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். . இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,

திருச்செந்தூர் - 628215,

தூத்துக்குடி மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 04639-242221.

https://hrce.tn.gov.in/hrcehome/index.php - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 30.10.2023 மாலை 05.45 மணி வரை

இது குறித்த முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/19vZrd03fzGM3bIzQWyI3iyD4H4CLePcs/view - என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.

***

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

உதவி ஆராய்ச்சியாளர் (Research Associate)

Department of Humanities Social Science துறையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க முனைவர் பட்டம் / எம்.எஸ். அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

எம்.எஸ்.சி./ எம்.இ., என். டெக் படித்திருக்க வேண்டும்.

குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆசிரியர் பணி அல்லது ஆய்வுப் பணியில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

ஆய்வு இதழில் ஏதாவது ஒன்றில் ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்க வேண்டும். 

ப்ரோகிராமிங் PYthon, NLTK/ SPACY, Keras/ Tensorflow/Pytorch, Text Processing உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இந்தப் பணிகளுக்கு ரூ.47,000/- முதல் ரூ.58,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: 

இது நேர்காணல் அடிப்படையில் தகுதியானவ்ர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தொடர்புக்கு .-

இ-மெயில் முகவரி : recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in 

திங்கள் - வெள்ளி - அலுவலக நேரத்தில் காலை 9 மணி முதல் 5.30 மணி வரை 044- 2257 9796  என்ற எண்ணை தொடர்புகொண்டு சந்தேகங்கள் கூடுதல் விவரங்களை பெறலாம். 

பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்  - https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Research%20Associate%20-Advt171.pdf

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.10.2023

 


 

Continues below advertisement
Sponsored Links by Taboola