அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic)  மீண்டும் தரவரிசை பட்டியலில் (ஏடிபி) முதலிடத்தைப் பிடித்துள்ளார். 


இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயாக் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில், உலகதரவரிசையில் 2-ம் நிலை வீரரான செர்பிடாவின் நோவக் ஜோகோவிச், பிரான்ஸின் அலெக்சாண்ட்ரே முல்லரை (AlexandreMüller) எதிர்த்து போட்டியிட்டார். 


இதில் ஜோகோவிச் 6-0, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 


தரவரிசை பட்டியலில் மீண்டும் நம்பர் ஒன் 


இந்த வெற்றியின் மூலம் கார்லஸ் அல்காரஸ்சை (Carlos Alcaraz) பின்னுக்கு தள்ளி முதலாம் இடத்திற்கு முன்னேறினார். 


தொடரிலிருந்து வெளியேறிய வீனஸ் வில்லியம்ஸ்


மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், பெல்ஜியம் வீராங்கனை கிரீட் மின்னெனை எதிர்கொண்டார்.  ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரீட் மின்னென் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த தோலிவியின் மூலம் வீனஸ் வில்லியம்ஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.