ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் ஆரம்பத்திலேயே வெளியேறினார்.செர்பிய வீரர் லாரென்சோ முசெட்டிக்கு எதிராக 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.


இந்நிலையில் தோல்வி குறித்து அவர் ஏடிபி டாட் காம் இணையதளத்திற்கு அளித்தப் பேட்டியில் இது மிகவும் மோசமானது என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நான் தோல்வியடைந்ததில் வருத்தமடைகிறேன். இதை கடந்து செல்கிறேன் என்றார்.


முசெட்டி தனது வெற்றி பற்றிக் கூறுகையில், "நான் அழுதுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது உணர்வுப்பூர்வமான வெற்றி. ஒரு நீண்ட மேட்ச். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. காற்றும், குளிரும் சூழலை இதமாக்கவில்லை. என்னைப் பற்றி நானே பெருமிதம் கொள்கிறேன். அப்படியொரு வெற்றி இது. என் கனவு நிறைவேறியது. அழுதுவிடாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார்.  


அதிக கிராண்ட்ஸ்லாம்:


35 வயதான ஜோகோவிச்  உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றிய வீரர். ரபேல் நடால் சாதனையை  அண்மையில் தான் ஜோகோவிச் சமன் செய்தார். நடால் இதற்கு முன்பாக 22 கிராண்ட்ஸ்லாம்  வென்றிருந்தார். கடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வெற்றியின் மூலம் ஜோகோவிச் அதனை சமன் செய்தார்.


கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றுவதற்காக 33 முறை இறுதிப்போட்டிகளுக்கு சென்ற பெருமையும் ஜோகோவிச்சிற்கு உண்டு. அதில் 22 முறை பட்டங்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். முதன்முறையாக 2007ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச் அந்த பட்டத்தை பெடரிடம் பறிகொடுத்தாலும், அடுத்தாண்டு ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை தொடங்கினார். 2009 மற்றும் 2017ம் ஆண்டுகள் தவிர அனைத்து ஆண்டுகளிலும் அவர் ஏதாவத ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையாவது கைப்பற்றி அசத்தியுள்ளார்.


அத்தனையும் அத்துப்படி:


புகழ்பெற்ற விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறையும், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 2 முறையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 முறையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அமெரிக்க ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன்களை கைப்பற்றிய பெருமைக்கு சொந்தக்காரர். இதில், 4 முறை இறுதிப்போட்டியில் நடாலையும், 4 முறை பெடரரையும் இறுதிப்போட்டியில் வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.


டென்னிஸ் ஜாம்பவானானா ஜோக்கோவிச் சமீப காலம ஆரம்ப சற்று ஆட்டங்களிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.