இந்தியாவின் பிரக்ஞானந்தா, கிளாச்சிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.  இதன்மூலம், இந்தியாவை சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தா, நார்வே செஸ் 2024ன் மூன்றாவது சுற்றில் வெள்ளைக் காய்களுடன் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை தோற்கடித்துள்ளார். 


நான்காவது இந்தியர் என்ற பெருமை:


நேற்று (மே 29ம் தேதி) ஸ்டாவஞ்சரில் நடந்த நார்வே செஸ் 2024 போட்டியின் மூன்றாவது சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா 9க்கு 5.5 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளார். மறுபுறம், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியோ கருவானா நேற்று, கிராண்ட் மாஸ்டர் டிங் லிரனுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு 3 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். மேக்னஸ் கார்க்சன் நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்ததன் மூலம், 5 இடத்திற்கு தள்ளப்பட்டார். 






கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியடைந்த பிரக்ஞானந்தாவுக்கு இது மிகப்பெரிய சாதனையாகும். இதன்மூலம், கிளாசிக்கல் செஸ்ஸில் கார்ல்சனை தோற்கடித்த நான்காவது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா ஆவார்.


நான்காவது சுற்றில் நகமுரா பிரக்ஞானந்தாவை எதிர்கொள்கிறார். முன்னதாக, அமெரிக்கரான ஹிகாரு நகமுரா, பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுக்கு எதிரான அர்மகெடோன் ஆட்டத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.


முன்னதாக, நார்வே செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா, ஆர்மகெடான் ஆட்டத்தில் பிரான்சின் ஃபிரோஸ்ஜா அலிரேசாவை எதிர்த்து வெற்றி பெற்றார் .






வைஷாலியும் முதலிடம்: 


அதே நேரத்தில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் நார்வே செஸ் பெண்கள் பிரிவில் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 






நார்வே செஸ் போட்டிகள் கடந்த மே 27ம் தேதி தொடங்கிய நிலையில், வருகின்ற ஜூன் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் இரண்டு முறை எதிர்கொள்ள உள்ளனர்.