தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக இருந்து நடிகராக பரிணாமம் எடுத்து இன்று இயக்குநர், தயாரிப்பாளர், எடிட்டர் என பன்முக திறமையாளராக விளங்குபவர் நடிகர் விஜய் ஆண்டனி. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான 'ரோமியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. 



இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ்,  சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா,  தலைவாசல் விஜய், தனஞ்ஜெயா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜூன் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று இப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.  


இந்த விழாவில் இயக்குநர் விஜய் மில்டனிடம் விஜய் ஆண்டனியை இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்து எடுத்த காரணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் மில்டன் பதில் அளிக்கையில் "இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி சார் தான் சரியாக இருப்பார். அவர் எப்போதுமே மூடியா, பெரிய அளவில் ரியாக்ஷன் இல்லாமல் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பார். நிறைய பேர் அதனால் அவருக்கு நடிக்க தெரியாது என சொல்கிறார்கள். அது அப்படி இல்லை. அப்படி ரியாக்ஷனை காட்டிக்கொள்ளாமல் நடிப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பது எங்களுக்குத்தான் தெரியும்.  


இந்த படத்தில் விஜய் ஆண்டனி சார் சின்னச் சின்ன விஷயங்களை கூட அவ்வளவு அழகாக செய்துள்ளார். இது ஒரு ஸ்கோப் இல்லாத ஒரு திரைப்படம். ஒரு சாதாரண மனிதனாக அவனுக்குள் இருக்கும் எமோஷன் அனைத்தும் முகத்தில் கொண்டு வருவது தான் ரொம்ப கஷ்டம். 



ரோமியோ படத்தில் கூட விஜய் ஆண்டனி சார் ரொம்ப அழகாக நடிச்சு இருந்தார். ப்ளூ சட்டை போட்டு இருந்தா மட்டும் கண்ணு தெரியாதான்னு தெரியல எனக்கு. விஜய் ஆண்டனி நடிப்பு கேரியரில் இதுவரையில் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன் கூட அழகாக வெளிப்படுத்திய ஒரு  திரைப்படம் என்றால் அது ரோமியோதான். அதை விட பல மடங்கு 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் செய்துள்ளார்.


அதிலும் குறிப்பாக இப்படத்தில் மேகா ஆகாஷும், விஜய் ஆண்டனியும் ஒரு ரெஸ்டாரண்டில் பேசிக்கொண்டு இருப்பது போன்ற ஒரு நீளமான சீன் உள்ளது. அந்த சீன்கான ஸ்க்ரிப்டை நான் ரொம்ப பிடிச்சு எழுதினேன். இந்த சீனை மட்டும் நான் நினச்ச மாதிரி ஸ்க்ரீன்ல கொண்டு வந்துட்டா நான் பெரிய டைரக்டர் அப்படின்னு நினச்சேன். அது அவ்வளவு அழகா வந்திருக்கு. அதுக்கு அவங்க இரண்டு பேரும் தான் காரணம். அவங்க இரண்டு பேருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக இருந்துது. சின்ன சின்ன எக்ஸ்பிரஷன் கூட ரொம்ப அழகா குடுத்து இருந்தாங்க.


5 ரூபா 10 ரூபா குடுக்குறது ஈஸி ஆனா ஐந்தரை, ஐந்தேமுக்கா அப்படின்னு சில்லறை கொடுப்பது தான் ரொம்ப கஷ்டம். அது விஜய் ஆண்டனி முகத்தில் அவ்வளவு அழகாக வருகிறது" என பேசி இருந்தார் இயக்குநர் விஜய் மில்டன்.