Norway Chess 2022: 6 நாட்களில் 2 முறை உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி விஸ்வநாதன் ஆனந்த் அசத்தல் !
6 நாட்களில் இரண்டு முறை உலக சாம்பியன் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த வீழ்த்தி அசத்தியுள்ளார்.

செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவர் கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார். அதன்பின்னர் கார்ல்சன் தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்து வருகிறார். நார்வேயில் நடைபெற்று வரும் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார்.
Just In




இந்தத் தொடரின் 5வது சுற்றில் நேற்று உலக சாம்பியன் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார். அந்தப் போட்டியில் க்ளாசிக்கல் கேம் பிரிவில் இருவரும் டிரா செய்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற அர்மகேடான் பிரிவில் உலக சாம்பியன் மேகன்ஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார். அத்துடன் 5 சுற்றுகளின் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தினார்.
மேலும் ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த 31ஆம் தேதி இதே தொடரில் கார்ல்சனை ஆனந்த் வீழ்த்தியிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு கடைசியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சனை வீழ்த்தியிருந்தார்.
உலக தரவரிசையில் டாப் 10ல் ஆனந்த்:
கடந்த சில சர்வதேச செஸ் தொடரில்களில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக நார்வே செஸ் தொடரில் பெற்ற இரண்டு வெற்றிகளின் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார். அவர் 2760 புள்ளிகளுடன் சர்வதேச தரவரிசையில் 9வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் டாப் 10 இடத்திற்குள் விஸ்வநாதன் ஆனந்த வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டு முறை தோற்கடித்துள்ளார். முதலில் அவர் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரிலும் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரிலும் அவர் தோற்கடித்திருந்தார். பிரக்ஞானந்தா செசசிபிள் மாஸ்டர் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்