ஐரோப்பியாவின் மிகவும் பழமை வாய்ந்த குத்துச்சண்டை போட்டிகளில் ஒன்று ஸ்டாண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி. இந்தப் போட்டியில் இந்திய சார்பில் நிகத் ஸரின், நீத்து, நந்தினி உள்ளிட்ட வீராங்கனைகள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 


இந்தக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகத் ஸரின் பங்கேற்றார். அவர் அரையிறுதியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற துருக்கியின் பாஸ் நஸை வீழ்த்தினார். இதனால் இறுதிப் போட்டியில் நிகத் ஸ்ரின் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப் போட்டியில் இவர் உக்ரைன் நாட்டின் டாட்டியான கோப்பை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் முதலில் உக்ரைன் வீராங்கை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து சுதாரித்து கொண்டு ஆடிய இந்திய வீராங்கனை நிகத் ஸரின் 4-1 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதே சாம்பியன்ஷிப் தொடரில் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு இவர் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார்.


அதேபோல் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நீத்து பங்கேற்றார். அவர் உலக யூத் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற இத்தாலியின் எரிகாவை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நீத்து 5-0 என்ற கணக்கில் எளிதில் வென்று அசத்தினார். அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்றார். 






மேலும் மகளிர் 81 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நந்தினி பங்கேற்றார். இவர் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார். அதில் தோல்வி அடைந்ததன் மூலம் வெண்கலப்பதக்கத்தை வென்றார். ஸ்டாண்ட்ஜா குத்துச்சண்டை போட்டியில் இந்திய மொத்தமாக 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண