இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள், மரபுகள், இனங்கள் போன்றவற்றின் கலவையாகும். இதன் காரணமாக, நாடு முழுவதும் ஆண்டுதோறும் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மகாசிவராத்திரி அவற்றில் ஒன்றாகும். சிவபெருமானின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த மஹாசிவராத்திரி பண்டிகை இந்த ஆண்டு (நாளை) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. 


தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பான நாளாக அமையும். அதன் அடிப்படையில், மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய நாள் மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த மஹாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வந்தாலும், கோவையில் உள்ள ஈஷா மஹாசிவராத்திரிதான் கடந்த சில ஆண்டுகளாக அதிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. 


இந்தநிலையில் இந்த ஆண்டு கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா (நாளை) மார்ச் 1 ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மார்ச் 1ம் தேதி இரவு விடிய விடிய சிவனுக்கு ஆராதனை செய்யப்பட்டு, இசை சங்கமம் முழுங்க பெரிய விழாவாக கொண்டாட இருக்கின்றனர். இந்த நாளில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு உற்சாகத்தினை அளிக்க இருக்கின்றனர். 


பங்கேற்கும் இசை கலைஞர்கள் : 


தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக கலக்கிவரும் ஷேன் ரோல்டன் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார். அதேபோல், தெலுங்கு பாடகி  மங்கலி, பாலிவுட் திரை உலகில் பல பக்தி பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகர் மாஸ்டர் சலீமும் இவ்விழாவில் பாட உள்ளார். 


தொடர்ந்து, அசாமின் புகழ்பெற்ற பின்னணி பாடகர் பப்பான், ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் ஹன்ஸ்ராஜ் ரகுவன்சியும் பங்கேற்க இருக்கின்றனர். 


இவ்வாறு, தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ், அசாம் என பல மாநில கலைஞர்களுடன் ஈஷா மஹாசிவராத்திரி விழா களைகட்ட உள்ளது. இவ்விழா கோவை ஈஷாவில் (இன்று) மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.  சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் மஹாசிவராத்திரி அன்று மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்திருப்பதற்காக  இத்தகைய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரியின் நேரலை  உலக அளவில் புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் விழாவையே முந்தி அதிக பார்வைகளை பெற்று உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


ஈஷா மையத்தில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை தமிழ் மொழியில் காண, ABP நாடு யூடியூப் சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட இருக்கிறது. மக்கள் தங்கள் இல்லங்களில் பாதுகாப்பாக இருந்தப்படியே நேரலையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண