Neeraj Chopra: தோஹா டைமண்ட் லீகில் 90 மீட்டர் வரை ஈட்டி எறிந்தும், இந்திய வீரர் நீரஜ் சோப்ராவால் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

90 மீட்டரை கடந்த நீரஜ் சோப்ரா:

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சொப்ரா, சர்வதேச போட்டிகளில் முதல்முறையாக 90 மீட்டரை கடந்து அசத்தியுள்ளார். வெள்ளியன்று தோஹா டைமண்ட் லீகில் பங்கேற்ற அவர், 90.23 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து வரலாறு படைத்தார். முன்னெப்போதும் 90 மீட்டர் தூரத்தை அடைந்திராத நீராஜின் முந்தைய அதிகபட்சமாக 89.94 மீட்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2022ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டாக்ஜோம் லீகில் அவர் அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில் தான் நேற்றைய போட்டியின் மூன்றவாது முயறிசியில் 90.23 மீ எட்டி, சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் 90 மீட்டரை கடந்த முதல் இந்தியர் என்ற சரித்திரத்தை தனதாக்கினார்.

சரித்திரம் படைத்த இந்தியர்

90 மீட்டரை அடைய வேண்டும் என்ற இலக்கு நீண்ட நாட்களாகவே நீரஜிற்கு கனவாகவே உள்ளது. பலமுறை அந்த இலக்கினை நெருங்கினாலும், எல்லைக்கோட்டை அடைய முடியாமலே இருந்தது. டோக்யோ ஒலிம்பிக்கில்  தங்கப்பதக்கம், புதாபெஸ்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றும் கூட, 90 மீட்டர் என்ற இலக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தான், நேற்று அது சாத்தியமாகியுள்ளது. இதன் மூலம் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில், 90 மீட்டரை கடந்த பட்டியலில் நீரஜ் சோப்ராவும் இடம்பெற்றுள்ளார். அதாவது 90 மீட்டர் தூரம் வரை ஈட்டியை எறிந்த 25வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் 98.48 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதலிடம் பிடித்துள்ள, செக் குடியரசை சேர்ந்த ஜான் ஜெலன்ஸி தான் தற்போது நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜான் மூன்று முறை ஒலிம்பிக் பட்டம் வென்றதோடு, எல்லா காலங்கலிலும் ஆகச்சிறந்த ஈட்டி எறிதல் வீரராகவும் கொண்டாடப்படுகிறார்.

இரண்டாவது இடம் பிடித்த நீரஜ்:

இந்தியராக சரித்திரம் படைத்தாலும், தோஹா டைமண்ட் லீக் முடிவில் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை மட்டுமே பிடித்தார் என்பது இந்திய ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இந்த போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த ஜுலியன் வெபர் 91.06 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், நீரஜ்சோப்ரா தனது மூன்றாவது வாய்ப்பில் 90.23 மீட்டர் ஈட்டிஐ வீசி முன்னேற்றம் கண்டார். ஆனால், கடைசி வாய்பில் ஜுலியன் 91 மீட்டரை கடக்க, நீரஜ் தனது அடுத்தடுத்த முயற்சிகளில் அதனை எட்டமுடியாமல் வாய்ப்பை தவறவிட்டு இரண்டாவது இடத்தை உறுதி செய்தார். கிரெனேடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர் மூன்றாவது இடத்தை பிடித்தார்.