சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா 19 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
பின்னர், சூர்ய குமார் யாதவ், லின் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இஷான் கிஷனும் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். இவர்கள் காட்டிய அதிரடியால் 13 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய மும்பை, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், க்ருணால் பாண்ட்யா ஆகியோர் சரியாக விளையாடததால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரை மிரட்டலாக வீசி 4 விக்கெட் எடுத்ததோடு மட்டுமல்லாமல், மொத்தமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மும்பை அணியில் அதிகபட்சமாக லின் 49, சூர்யகுமார் யாதவ் 31, இஷான் கிஷன் 28 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடி வருகிறது.