இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத பெயர் ‘மகேந்திர சிங் தோனி’. ஒருநாள், டி-20, டெஸ்ட் என மூன்றிலும் உலகக்கோப்பை கைப்பற்றி தந்த கேட்பன் என்ற பெருமை தோனிக்கு மட்டுமே உண்டு. நெருக்கடியான சூழலிலும் அணியில் உள்ள வீரர்களுக்கு ஊக்கமளித்து வாகை சூட வழிவகுக்கும் பண்பு கொண்டவர். கேப்டன் கூல் என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது அவரின் அசால்டான பண்பு காரணமாகவே.


ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் அதிகப்பட்சமாக ஊதியம் வழங்கப்பட்ட வீரர் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்கு ஆண்டுக்கு 12 கோடி வரை ஊதியம் வழங்க ஒப்பந்தம் செய்தது. இந்தக் கட்டுரையில் தோனியில் சொத்து மதிப்பு குறித்த விவரத்தினை காணலாம். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஓய்விற்குக்கு பிறகு, பண்ணை அமைப்பது, திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல தொழில்களை தொடங்கினார்.




தோனியின் மின்னல் வேக ஸ்டெம்ப்பிங், ரன் எடுப்பதிலும் அதிக வேகமாக ஓடுவது எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டாலும், அவரது ஃபிட்னஸ் குறித்தும் பேசப்பட்டது. ஃபிட்னஸ் துறையிலும் தோனி தொழிலை தொடங்கினார். நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்களை வைத்துள்ளார். இது 'SportsFit World Pvt.Ltd.' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.


கால்பந்து தோனிக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. சென்னையின் FC அணியின் பங்குதாரர்களில் தோனியும் ஒருவர்.


தோனியை தெரிந்த அனைவரும் தெரிந்ததுதான் அவருக்கு பைக் என்றால் அவ்வளவு ப்ரியம் என்று. அவரிடம் பிரபலமான, அரிதான பைக் கலெக்சன் வைத்துள்ளார். அதோடு, தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகஜூர்னாவுடன் இணைந்து ’prestigious Supersport World Championship’ என்பதில் பைக் ரேசிங் அணியின் பங்குதாரராக உள்ளார்.  வாழ்க்கை வரலாற்று திரைப்படமான MS Dhoni: The Untold Story மூலம் ரூ. 30 கோடிகளை எம்.எஸ். தோனி சம்பாதித்தார் என்றும் கூறப்படுகிறது. 




கடந்த 2019 ஆம் ஆண்டு, அவரது மனைவி ஷாக்சி சிங் ராவத் உடன் இணைந்து  ’Dhoni Entertainment Private Limited (DEPL)'  என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்தாண்டு தொடக்கத்தில், இதன் முதல் திரைப்படமான Let's Get Married," என்பதை அறிவித்தது. இதை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.  





வின்டேஜ் கார்களான Pontiac Firebird,  Nissan 4W73,  Hummer H2, மற்றும் பைக் மாடல்கள் Harley-Davidson,Kawasaki Ninja H2   உள்ளிட்டவைகள் தோனியிடம் உள்ளது.  ராஞ்சியில் ஏழு ஏக்கர் பரப்பளவில் வீடு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளிலும் தோனி வீடு உள்ளதாக ஏசியாநெட் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.