Watch Video : பைக்கில் லிப்ட் கொடுத்த தோனி.. யாருக்குன்னு தெரியுமா..? வீடியோவுடன் ஹார்டீன் பறக்கவிட்ட நெட்டிசன்கள்..

தனது வீட்டு காவலாளிக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த தோனி - வைரலாகும் வீடியோ

Continues below advertisement

தனது பண்ணை வீட்டில் வேலை செய்யும் பாதுகாவலருக்கு கிரிக்கெட் வீரர் தோனி தனது பைக்கில் லிப்ட் கொடுத்ததாக வீடியோ வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

கூல் கேப்டனான தோனி தனது பண்ணை வீட்டில் காவலாளிக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த மாதம் நடைபெற்ற 16வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் டைட்டனஸ் அணியுடன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. போட்டியின் இறுதியில் 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் குஜராத்தை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது. ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

வெற்றி தருணத்தில் ஜடேஜாவை தோனி தூக்கி கொண்டாடும் எமோஷனலான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. ஐபிஎல் தொடருக்கு பிறகு தனது வேலைகளில் பிசியாக இருக்கும் தோனியின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் ஆர்வம் செலுத்தி வரும் தோனி அடிக்கடி விவசாயம் செய்யும் புகைப்படத்தையும் பகிர்ந்து வருவார். இந்த நிலையில் அவரது பண்ணை வீட்டிற்கு பைக்கில் செல்லும் தோனி, வீட்டு காவலாளிக்கு லிப்ட் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. 

தோனியின் பிரமாண்ட பண்ணை வீட்டின் நுழைவு வாயில் தூரமாக இருப்பதால், அங்கு வேலை பார்க்கும் காவலாளியை தனது பைக்கில் தோனி அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தோனியின் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நெட்டிசன்கள், ”செக்கியூரிட்டி கார்டு, பைக் ரைடு வித் தோனி” என பதிவிட்டு வருகின்றனர்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola