இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் 34 வயதான மொயின் அலி 64 டெஸ்ட் போட்டிகளில் 2914 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 155 ரன்கள் குவித்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 195 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியிலும் தொடர்ந்து ஆடுவதாக அறிவித்துள்ளார்.
Moeen Ali Retirement: டெஸ்ட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி ஓய்வு..
சுகுமாறன் | 27 Sep 2021 12:52 PM (IST)
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து_ஆல்ரவுண்டர்_மொயின்அலி