திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களை சென்னையில் நடைபெறும் செஸ் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் சுமார் 28 பேர் போட்டியை காண அழைத்து வரப்பட்டனர். உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஏற்பட்டால் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளை அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அழைத்துவரப்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் உற்சாகமாக செஸ் விளையாட்டு போட்டியை கண்டு களித்தனர். அழைத்துவரப்பட்ட மாணவர்களுக்கு ஏற்பட்ட செலவு மற்றும் உணவுகள் ஆகியவை அனைத்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை செய்திருந்தனர்.



 

இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி பதிவு செய்துள்ள டிவிட், சதுரங்க விளையாட்டில் சாதிக்க விழையும் மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் CM chess trophy போட்டி கடந்த மாதம் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியைக் காண அழைத்துச் செல்லப்பட்டனர். கனவு காண்போருக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்து ஊக்குவிக்கும் பணியை கடமையெனக் கருது தொடர்ந்து செய்வோம் என பதிவு செய்துள்ளார்.

 

 

நேற்று ஏழாவது சுற்று போட்டி

 

 

செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா-3 அணியுடன் மோதிய இந்தியா-1 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்தியா-3 அணிக்காக களமிறங்கிய அபிஜீத் குப்தா, புரானிக் அபிமன்யுவுக்கு எதிராக இந்தியா-1 அணி சார்பில் எரிகைசி அர்ஜுன், எஸ்.எல். நாராயணன் வெற்றிகளைக் குவிக்க, ஹரிகிருஷ்ணா பென்டாலா - சூரியசேகர் கங்குலி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி - சேதுராமன் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

 



 

கியூபாவை வீழ்த்தியது இந்தியா-2, 7வது சுற்றில் கியூபா அணியுடன் நேற்று மோதிய இந்தியா-3 அணி 3.5க்கு .5 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது. இந்தியா-3 சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, சரின் நிஹல் வெற்றி பெற்று தலா 1 புள்ளி பெற்ற நிலையில், கியூபாவின் அல்மெய்டா குவின்டானா ஒமருடன் மோதிய அதிபன் டிரா செய்து அரை புள்ளி பெற்றார். குகேஷ் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பெற்று அசத்தினார். மகளிர் பிரிவு 7வது சுற்றில் களமிறங்கிய இந்தியா-1 அணி 2.5 - 1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.



இந்திய வீராங்கனைகள் டானியா சச்தேவ், வைஷாலி வெற்றி பெற்ற நிலையில் கோனெரு ஹம்பி அதிர்ச்சி தோல்வி கண்டார். ஹரிகா - பாலஜெயேவா கானிம் மோதிய ஆட்டம் டிரா ஆனது. கிரீஸ் அணியுடன் மோதிய இந்தியா-2 மகளிர் அணி 1.5 - 2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது.மற்றொரு மகளிர் 7வது சுற்று போட்டியில் இந்தியா-3 அணி 3-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வென்றது. ஈஷா, நந்திதா வெற்றியைப் பதிவு செய்ய, பிரத்யுஷா, விஷ்வா வஸ்னவாலா டிரா செய்தனர்.