ஐ.பி.எல்.லின் 14வது சீசன் கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரின் 9வது ஆட்டம் இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதுகின்றனர்.
இரு அணிகளுமே தலா இரண்டு ஆட்டங்களில் இதுவரை விளையாடியுள்ளனர். பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக ஹைதராபாத் அணி இரண்டு போட்டிகளிலுமே தோல்வியை தழுவியது. பெங்களூர் அணிக்கு எதிராக தோல்வியையும், கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றியையும் மும்பை பதிவு செய்துள்ளது.
டாசில் வெற்றி பெற்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதுலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியில் ரோகித் சர்மா, குயிண்டின் டி காக், சூர்யகுமார் யாதவ்,இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குருணால் பாண்ட்யா என்று பேட்டிங் ஆர்டர் மிகவும் வலுவாக களமிறங்கியுள்ளனர். ஹைதராபாத் அணியும் வலுவான பந்துவீச்சுடன் களமிறங்க உள்ளது. இந்த ஆட்டம் நிச்சயம் விறுவிறுப்பாக அமையும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.