Neeraj Chopra: டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, வெறும் 0.01 மிட்டர் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்தார்.
டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா ஏமாற்றம்:
டைமண்ட் லீக் 2024ல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய தடகள வீரர், நிரஜ் சோப்ரா 2வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவரது மதிப்புமிக்க சாதனைகளின் பட்டியலில் மேலும் ஒரு கௌரவத்தை இணைத்துக் கொண்டார். வெறும் 0.01 மீட்டர் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்து, கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதலிடம் பிடித்து அசத்தினார்.
இறுதிப்போட்டி நிலவரம்:
- ஆண்டர்சன் பீட்டர்ஸ்: 87.87 மீ
- நீரஜ் சோப்ரா: 87.86 மீ
- ஜூலியன் வெபர்: 85.97 மீ
இந்த ஆண்டு டைமண்ட் லீக்கின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீம் தகுதிப் புள்ளிகளுக்கு வராததால் அவர் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் தடகள வீரர் தனது பெயருக்கு 5 புள்ளிகளைப் பெற்றிருந்தார், இது அவரை எட்டாவது இடத்திற்கு தள்ளியது.
அர்ஷத் நதீம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறியதற்குக் காரணம், 2024 ஒலிம்பிக்கில் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றதிலிருந்து அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பதுதான்.
நீரஜ் சோப்ரா, இரண்டாவது இடத்தைப் பிடித்ததால், துரதிர்ஷ்டவசமாக தனது சாம்பியன் பட்டத்தை ழந்தார். அவர் நல்ல ஃபார்மில் இருந்தாலும், நீரஜ் சோப்ரா இப்போது தனது டைமண்ட் லீக் மற்றும் ஒலிம்பிக்ஸ் பட்டத்தை அடுத்தடுத்து இந்த ஆண்டில் இழந்துள்ளார்.
நீரஜ் சோப்ராவின் முயற்சிகள்:
இந்தியாவின் நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா, ஜக்குப் வாட்லெஜ் மற்றும் ஆண்டர்சன் பீட்டர்ஸ் போன்ற போட்டியாளர்களால் கடும் போட்டியை எதிர்கொண்டார். அவர் களமிறங்கியதும், பிரஸ்ஸல்ஸில் உள்ள கிங் பவுடோயின் ஸ்டேடியத்தைச் சுற்றி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தடகள வீரர் 82.04 மீ மற்றும் 83.30 மீ. முயற்சிகளை வெற்றிகரமாக வழங்கியதால், நீரஜ் சோப்ரா மீதான இந்தியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. நீரஜ் சோப்ராவின் தனது மூன்றாவது முயற்சியில் அதிகபட்சமாக 87.86 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார்.
இருப்பினும், அவரது கடைசி முயற்சியும் முதல் இடத்தைப் பெற போதுமானதாக இல்லை, ஏனெனில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் இப்போது டைமண்ட் லீக் சாம்பியனாக இருக்கிறார்.அதுவும் வெறும் 0.01 மீட்டர் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்து, அவர் அந்த பட்டத்தை இந்தியாவின் நீரஜ் சோப்ராவிடம் இருந்து பெற்றார்.