சீர்காழியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சாலையோர மிதிவண்டி சைக்கிள் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாலையோர மிதிவண்டி போட்டியானது சீர்காழியில்  நேற்று நடைபெற்றது. சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி பொறுப்பில் இந்தாண்டுக்கான சாலையோர மிதிவண்டி போட்டியானது நடைபெற்றது. மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த 14 வயது, 17 வயது, 19 வயது என மாணவ மற்றும் மாணவிகளுக்கு 6 வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டது. 




இதில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. இவர்கள் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். 14 வயது பிரிவில் டி.கிஷோர் ஸ்ரீ 8 -ம் வகுப்பு சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி மாணவரும், எஸ்.கபினியா 8-ம் வகுப்பு மயிலாடுதுறை ராஜ் மெட்ரிக் பள்ளி மாணவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 17 வயது பிரிவில் எம்.தமிழ்செல்வன் 9-ம் வகுப்பு திருமுல்லைவாசல் அரசு மேனிலைப்பள்ளி மாணவரும் , ஆர்.ஹரிணி சந்திரன் 10-ம் வகுப்பு குட்சமாரிட்டன் மெட்ரிக் பள்ளி மயிலாடுதுறை மாணவி வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 19 வயது பிரிவில் ஜி.எஸ்.கவியன் 11-ம் வகுப்பு ராஜ் மெட்ரிக் பள்ளி மயிலாடுதுறை மாணவரும், ஆர்.தர்ஷினி 10-ம் வகுப்பு சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி சீர்காழியை சேர்ந்த மாணவியும் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். 


School Holiday: புயல் எச்சரிக்கை! டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...எந்தெந்த மாவட்டங்கள்?




போட்டியினை கொள்ளிடம் ஆனணக்காரச்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாலர் அகோரமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கினார். போட்டியின் நடுவர்களாக, மேலையூர் பள்ளி உடற்கல்வி இயக்குனர் சி.சிதம்பரம், யு.செந்தில் குமார் திருமுல்லைவாசல், பிரவின் ஆனந்த் மேலையூர், கோபி மயிலாடுதுறை, கலைமதி மயிலாடுதுறை மற்றும் டி.முரளி, பி.மார்கண்டன், எஸ்.சக்திவேல், ஆர்.ராகேஷ், ஆர்.கபிலன் ஆகிய சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியைச் சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர் பணியாற்றினார்.


PM Modi Tweet: "நண்பர்களை பார்த்தாலே குஷி தான்" - துபாயில் எடுத்த செல்ஃபியுடன் பிரதமர் மோடி போட்ட ட்வீட்!




மேலும் 108 அவசர மருத்துவ உதவி அலுவலர்கள், காவல்துறை ஆய்வாளர்கள், காவலர்கள் என ஏராளமான அரசு பணியாளர்கள் பணியை மேற்கொண்டார். 10-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். போட்டியின் அனைத்து ஏற்பாடுகளையும் சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த உதவி தலைமையாசிரியரும் , உடற்கல்வி இயக்குனருமான எஸ்.முரளிதரன் செய்திருந்தார். வெற்றி பெற்ற மாணவர்களை மயிலாடுதுறை மாவட்ட உடற்கல்வி ஆய்வாலர் வீ.உமாநாத் , சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி ஆகியோர்கள் வாழ்த்தினர். போட்டிகாக சீர்காழி புறவழி சாலையில், தமிழ்நாடு காவல் துறை மற்றும் தமிழ்நாடு சுகாதார துறையின் 108 அவசர மருத்துவ வசதிகள் உள்ளிட்ட  பாதுகாப்பு மற்றும்  அடிப்படை வசதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.