6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம் (51 கிலோ) மற்றும் சாக்ஷி சவுத்திரி (54 கிலோ) ஆகியோர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளனர்.






துபாயில் ஆசிய குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது, அதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் மங்கோலிய வீராங்கனையான லுட்சைகான் அல்டன்ட்சேட்செக்-கை வீழ்த்தினார். குறிப்பாக இந்திய முன்னணி வீராங்கனை மேரி கோம் கவுண்டர் அட்டாக் செய்து அல்டன்ட்சேட்செக் வீழ்த்திய விதம் அவரின் அனுபவத்தை பளிச்சிட செய்தது. 



அதே நேரம் இரண்டு முறை இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப்பை வெற்றி பெற்றுள்ள இந்திய வீராங்கனை சாக்ஷி 3-2 என்ற கணக்கில் கசாக் வீராங்கனை தினா சோலமான் வீழ்த்தினார். முக்கியமான தருணங்களில் சாக்ஷி சிறப்பாக செயல்பட்டது மூலியமாக இந்த வெற்றி உறுதியானது.







இந்திய ஆடவர் அணியை சேர்ந்த அமித் பாங்கள் (52 கிலோ ), வரிந்தர் சிங் (60 கிலோ), ஷிவ தாபா ( 64 கிலோ ), விகாஸ் க்ரிஷன் (69 கிலோ), சஞ்சீத் (91 கிலோ) ஆகியோர் அரை இறுதியில் நாளை மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.