இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டம் பற்றி பல கட்டுக்கதைகள் வலம் வருகின்றன. இந்த கட்டுக்கதைகள், அரைகுறை அறிக்கை மற்றும் பாதி உண்மைகள் மற்றும் அப்பட்டமான பொய்கள் என  வெளியாகி வருகின்றன. நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) மற்றும் கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு (NEGVAC)  தலைவருமான  டாக்டர் வினோத் பால், இந்த கட்டுக்கதைகளுக்கு பதில் அளித்து, இந்த பிரச்னைகளுக்கான உண்மைகளை தெரிவிக்கிறார். 


கட்டுக்கதை 1: வெளிநாட்டிலிருந்து தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு மத்திய அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை


உண்மை: 2020 நடுப்பகுதியில் இருந்து சர்வதேச தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. ஃபைசர், ஜே & ஜே , மாடர்னா போன்ற நிறுவனங்களுடன்  பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.


இந்தியாவில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து விற்கவும்/ உற்பத்தி செய்யவும் மத்திய அரசு  அனைத்து உதவிகளையும் வழங்கியது. இருப்பினும், சர்வதேச அளவில் தடுப்பூசி விநியோகம் குறித்தும் நமக்கு புரிதல் வேண்டும். உலகளவில் தடுப்பூசி விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் உள்ளன. மேலும், அந்தந்த  நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிற நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உதாரணமாக, நம் நாட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இது போன்ற ஒரு நெருக்கடியை சந்தித்து வருகின்றன. 


தடுப்பூசி கையிருப்பு குறித்து ஃபைசர் நிறுவனம் தெரியபடுத்தியவுடன், தடுப்பூசிகள் எளிதாக இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக , ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்தின் 2வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை துரிதப்படுத்தப்பட்டன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் ஒன்றரை லட்சம் டோஸ் இந்தியாவிற்கு வந்துள்ளது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியின் கீழ் இந்திய நிறுவனம் அதிக அளவில் இந்த  தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.   


கட்டுக்கதை 2: வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதிக்கவில்லை 


உண்மை: அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி தருமாறு கோவிட்-19 தடுப்பூசி நிபுணர் குழு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எந்தவொரு தடுப்பு மருந்து நிறுவனத்தின் அவசரகால பயன்பாட்டு கோரும் விண்ணப்பமும் தற்போது நிலுவையில் இல்லை.  



 


கட்டுக்கதை 3:  தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க கட்டாய உரிமம் கொடுக்க வேண்டியது தானே?   


உண்மை: உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்திய அதிகரிக்க 'கட்டாய உரிமம்' மிகவும் கவர்ச்சிகரமான திட்டங்களாக அமையாது. தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க ‘சூத்திரம்’  மட்டும்  முக்கியமானதல்ல. மனித வளங்கள், தடுப்பு மருந்து முறைகளுக்கான மூலப்பொருட்கள் மற்றும் ஆதாரங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவது, மூன்றாம் நிலை உயிர்ப் பாதுகாப்பு (Bio-safety) ஆய்வகத்தை பயன்படுத்துவது முக்கியமானதாகும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மேற்கொண்ட நிறுவனங்கள் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்ய முன்வரவேண்டும்.


கட்டாய உரிமத்தை விட ஒருபடி மேலே சென்று, பாரத் பயோடெக்  நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிக்க 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இந்த அதிகரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இதர பொதுத்துறை தயாரிப்பு நிறுவனங்களின்  உற்பத்தி திறன்கள்,  தேவையான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படுகின்றன.  உள்நாட்டில் ஸ்புட்னிக் உற்பத்தியை அதிகரிக்க  இதே போன்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது.


இதைச் சற்று சிந்தித்து பாருங்கள்: 2020-ஆம் ஆண்டில் மாடர்னா தனது கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தயாரிக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக வழக்குத் தொடரப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால், உலகளவில் எந்தவொரு நிறுவனமும் தடுப்பூசியை உற்பத்தி செய்யவில்லை. எனவே, இங்கு கட்டாய உரிமம் வழங்குவது பெரிய சிக்கல்களாக இருக்கப்போவதில்லை என்பது தெரியவருகிறது. தடுப்பூசி உற்பத்தி மிகவும் எளிதானது என்று எடுத்துக் கொண்டால், ஏன் வளர்ச்சியடைந்த நாடுகளிலும்  தட்டுப்பாடு நிலவுகிறது? 


கட்டுக்கதை 4: மத்திய அரசு தனது பொறுப்புகளை மாநிலங்களிடம் விட்டுள்ளது


உண்மை: தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதியளிப்பது முதல்  உற்பத்தியை அதிகரிக்க உடனடி அனுமதி அளிப்பது, இந்தியாவுக்கு வெளிநாட்டு தடுப்பூசிகளை கொண்டு வருவது வரை மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. தடுப்பூசிக்காக மாநிலங்கள் அறிவித்துள்ள உலகளாவிய டெண்டர்களால் ஒன்றும் நடக்கப் போவதில்லை; குறைந்த கால அளவில் டெண்டர்கள் கோரி தடுப்பூசிகளை பெற முடியாது




 


கட்டுக்கதை 5: மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய தடுப்பூசிகளை வழங்குவதில்லை.


உண்மை: ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்கள்படி, வெளிப்படையான முறையில், மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.


கட்டுக்கதை 6: குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


உண்மை: தற்போது வரை, உலகில் எந்த நாடும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை. உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரைக்கவில்லை.