மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று பிரணாய் மட்டும் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். மற்ற வீரர் வீராங்கனைகள் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர். இந்தச் சூழலில் இன்று பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் தங்களுடைய முதல் சுற்று போட்டியில் பங்கேற்றனர். அதில் பி.வி.சிந்து தாய்லாந்து நாட்டின் பார்ன்பாவி வாங்கை எதிர்த்து விளையாடினார். 


இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே பி.வி.சிந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். இவர் முதல் கேமை 21-13 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமிலும் தாய்லாந்து வீராங்கனை சற்று சிறப்பாக விளையாடினார். எனினும் பி.வி.சிந்து தொடர்ந்து நன்றாக விளையாடி வந்தார். இரண்டாவது கேமை 21-17 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். மொத்தம் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியை பி.வி.சிந்து 21-13,21-17 என்ற கணக்கில் வென்று அசத்தினார். 


 






முன்னதாக இன்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் அமெரிக்காவின் ஐரிஸ் வாங்கை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமில் ஐரிஸ் 21-11 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இரண்டாவது கேமில் சாய்னா நேவால் சற்று சுதாரித்து கொண்டு ஆட தொடங்கினார். எனினும் ஐரிஸ் வாங்  அந்த கேமையும் 21-17 என்ற வென்றார். இதனால் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து சாய்னா நேவால் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறினார். 


உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து இந்தாண்டு இரண்டு பட்டங்களை மட்டுமே வென்றுள்ளார். இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சிந்து முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார். ஆகவே மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இவர் சிறப்பாக விளையாடுவார் என்று கருதப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண