IND vs GBR: ஒரு கோல் வித்தியாசத்தில் பிரிட்டன் வெற்றி: போராடி தோற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி!
அரையிறுதியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இறுதிச் சுற்றான நான்காவது ரவுண்டில் ஒரு கோல் அடித்த பிரிட்டன், போட்டியில் கூடுதலாக ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுள்ளது. 3 கோல்களுடன் இந்தியா முன்னிலை பெற போராடி வருகிறது. இன்னும் 11 நிமிடங்களே எஞ்சியுள்ளது.
Background
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி குரூ பிரிவில் இந்திய மகளிர் அணி 2 வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடம் நான்காம் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 2ஆம் இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 1-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் 41ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது.
அரையிறுதியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி பிரிட்டன் அணியை எதிர்த்து இன்று வெளியாடுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -