Ind vs Sl T20 Live Updates: ஹசரங்கா புண்ணியத்தில் வென்றது ஸ்ரீலங்கா; தொடரையும் கைப்பற்றி அசத்தல்!
இன்று நடைபெற இருக்கும் கடைசி டி-20 போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும். தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் இன்று களமிறங்கியுள்ளனர்.
ABP NADULast Updated: 29 Jul 2021 11:13 PM

Background
இலங்கையுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ஷிகர்தவாண் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டித்தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் வென்றுவிட்ட நிலையில், இலங்கை அணியுடனான முதல்...More
இலங்கையுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ஷிகர்தவாண் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டித்தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் வென்றுவிட்ட நிலையில், இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் கடைசி டி-20 போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும்.
ஹசரங்கா புண்ணியத்தில் வென்றது ஸ்ரீலங்கா; தொடரையும் கைப்பற்றி அசத்தல்!
மூன்றாவது டி20 போட்டியை வெற்றி பெற்ற இலங்கை அணி, தொடரை 2க்கு 1 என்கிற விகிதத்தில் வென்றது. 14.3வது ஓவரில் 82 ரன்கள் எடுத்த இலங்கை, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. அந்த அணியின் டிசில்வா 23 ரன்களுடனும், ஹசரங்கா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர். ராகுல் சஹார் மட்டும் இந்தியா தரப்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.