Ind vs Sl T20 Live Updates: 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி; போராடி தோற்றது இந்தியா!

இந்தியா-இலங்கை அணிகள் விளையாடும் இரண்டாவது டி20 போட்டியின் அடுத்தடுத்த அப்டேட்களை இந்த பிளாக் பகுதியில் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 28 Jul 2021 11:29 PM
4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி; போராடி தோற்றது இந்தியா!

இரண்டாவது டி20ல் 133 என்ற இலக்கை 19.4 ஓவரில் எட்டிய இலங்கை, இரண்டு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. 

24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி: இந்தியா-இலங்கை போட்டி விறுவிறு!

16 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ள இலங்கை அணி வெற்றி பெற, 34 ரன்கள் தேவை. 24 பந்துகள் எஞ்சியுள்ள நிலையில் எஞ்சியிருக்கும் 5 விக்கெட்டுகளை கொண்டு இலங்கை ஆடி வருகிறது. தனஞ்ஜெயா 23, மெண்டிஸ் 1 ரன்னில் ஆடி வருகின்றனர். 

இரண்டாவது விக்கெட்டை இழந்த இலங்கை; பரபரப்பாக நகரும் இரண்டாவது டி20!

இரண்டாவது இன்னிங்சில் 7 வது ஓவரில் 39 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்தது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார். 8 ரன்கள் எடுத்திருந்த சமரவிக்ரமா விக்கெட்டை  அவர் கைப்பற்றினார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தற்போது பந்து வீசி வரும் நிலையில், அவர்களுக்கு சாதகமாக ஆட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

தடுமாறும் இலங்கை: முதல் விக்கெட்டை இழந்தது இலங்கை; 50 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஸ்வர் சாதனை!

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இலங்கை அணி துவக்கியது. இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். 2.3வது ஓவரில் புவனேஸ்வர் குமார் பந்தில் அவிஸ்கார் பெர்னாண்டோ 11 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ராகுல் ஜவார் சிறப்பான கேட்ச் பிடித்து அவரை ஆட்டமிழக்கச் செய்தார். புவனேஸ்வர் குமார் தனது 50வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 

இலங்கை சுழலில் சிக்கிய இந்திய பேட்ஸ் மேன்கள்: 132/5 ரன்கள் மட்டுமே சேர்த்து இன்னிங்சை முடித்த இந்தியா!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, துவக்கத்தில் சிறப்பாக ஆடியது. தவான்-கேக்வாட் அடுத்தடுத்து அவுட் ஆன பின், பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக இலங்கை அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. அதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


கெய்க்வாட்-21


தவான்-40


படிக்கல்-29


சாம்சன்-7


ரானா-9


ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 


புவனேஸ்குமார்-13


சைனி- 1


ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 


இலங்கை தரப்பில்...


தனஞ்ஜெயா-2


சமீரா-1


ஹசரங்கா-1


ஷனாகா-1


 

விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா, 104/4

அடுத்தடுத்து சொதப்பல்; விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா, 104/4

29 ரன்களில் வெளியேறிய படிக்கல்

இந்திய அணி 99 ரன்களில் 3 ஆவது விக்கெட்டை இழந்தது. 16 ஓவர்களின் முடிவில் 100 ரன்கள் எடுத்துள்ளது.

ஷிகர் தவான் 40 ரன்களில் அவுட்

இந்திய அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 40 ரன்களில் வெளியேறினார். அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கி விளையாடி வருகிறார்.

Ind vs Sl T20: முதல் விக்கெட்டை இழந்தது இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது. 7 ஓவரில் 49 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. கெய்க்வாட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்

பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள்) 45 ரன்கள் எடுத்த இந்திய அணி

 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்த இந்திய அணி, பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள்) 45 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 23, கெய்க்வாட் 20

துவைத்து எடுக்கும் இந்தியா - தவான், கெய்க்வாட் விளாசல்

இலங்கை அணிக்கு எதிரான இரடண்டாவது டி20 போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 21, கெய்க்வாட் 15

Background

கொரோனா காரணமாக இந்திய அணியில் சில வீரர்கள் மாற்றப்பட்டு இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. அதன் படி இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அணி, இந்த போட்டியை வெற்றி பெற முழு தீவிரம் காட்டும். அதே நேரத்தில் இந்த போட்டியை வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி பலப்பரிட்சை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.