லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பை கோப்பையுடன் தொடர்ச்சியான படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பகிரப்பட்டதில் இருந்து வைரலாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக உலகக் கோப்பையுடன் அவர் படுக்கையில் படத்துடன் உறங்கிய போட்டோ வைரலாகி வருகிறது.


அவர் படங்களைப் பகிர்ந்துகொண்டு ஸ்பானிஷ் மொழியில் "குட் மார்னிங்" என்று ஸ்மைலி  எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோவில் அவர் தனது படுக்கையில் போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவதைக் காட்டுகிறது. படுக்கையில் இருக்கும் போது அவர் கோப்பையை கட்டிப்பிடித்து உறங்குகிறார். இருப்பினும், அவர் வெளியிட்ட புகைப்படம் அது மட்டுமல்ல.
22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டீனா கோப்பையை கைப்பற்றியது. 






அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸியின் கனவு நினவானது. 92 ஆண்டுகால உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில், சிறந்த வீரருக்கான கோல்டன் பாலை ( தங்க பந்து) இரு முறை வென்ற ஒரே வீரர் மற்றும் முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை மெஸ்ஸி படைத்துள்ளார். இதற்கு முன்பாக, 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி தங்கபந்து வென்று சாதனை படைத்திருந்தார்.


உலகக் கோப்பை கால்பந்தை அர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்கு ஒரே காரணமாக இருந்தவர் மெஸ்ஸி. 35 வயதான மெஸ்ஸி இதுவரை கால்பந்தில் படைக்காத சாதனைளே இல்லை என்று சொல்லுமளவிற்கு சிறந்த வீரருக்கான விருது உள்பட ஏராளமான விருதுகளை படைத்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு விளையாடிய 4 உலகக்கோப்பையிலும் சேர்த்து 6 கோல்கள் மட்டுமே அடித்திருந்த மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையில் 7 கோல்களை விளாசி மொத்தம் 13 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.


மெஸ்ஸியின் இத்தனை ஆண்டுகால கால்பந்து சாதனைகளுக்கே கிரீடமாக அமைந்திருபக்கும் உலகக்கோப்பையின் மின்னும் வைரக்கல்லாய் மாறியுள்ளது இந்த தங்க கால்பந்து.