திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37). மாற்று திறனாளியான இவர், அப்பகுதியில் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு உதவுவதற்கு 16 வயதுடைய ஒரு சிறுமி சென்று உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி 16 வயதுடைய சிறுமி வழக்கம்போல் ராஜாவுக்கு உதவிகள் செய்ய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது உதவி செய்து கொண்டு இருந்த சிறுமியை திடீரென ஆசை வார்த்தைகள் கூறி  பாலியல் வன்கொடுமை செய்ய  முயன்று உள்ளார். பின்னர் சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். பொதுமக்கள் ஓடிவருவதை அறிந்த ‌ ராஜா சிறுமியை அங்கேயே விட்டு, விட்டு பின்பக்கமாக தப்பியோடியுள்ளார். அதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


இந்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போச்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி  தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ராஜாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 4 லட்சம் நிதியுதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ராஜாவை காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.


 




அதபோன்று திருவண்ணாமலை மாவட்டம் பெரணம்பாக்கம்  சேர்ந்தவர் அண்ணாதுரை வயது (46), இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் பம்பு செட்டில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று உள்ளார். அப்போது அங்கு சிறுமியை தேடி அவரது உறவினர்கள் அங்கு வந்தனர். இதைகண்டு அண்ணாதுரை சிறுமியை அங்கேயே விட்டு, விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனர்.


 


 




மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.  இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி இன்று தீர்ப்பு கூறினார். அ தில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அண்ணாதுரைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தார். மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூபாய் 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து அண்ணாதுரையை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.