கால்பந்து உலகின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் லியோனல் மெஸ்ஸி. இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவருக்கான சமகால மற்றும் சரியான போட்டியாளராக போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருதிகின்றனர் ரசிகர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. லியோனல் மெஸ்ஸி தற்போது அர்ஜெண்டினாவின் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் பார்சிலோனா கிளப் அணிக்காகவும் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் கோபா அமெரிக்க கால்பந்துப் போட்டியில் இவர் விளையாடி வருகிறார். சமீபத்தில் இவர் விளையாடிய ஆட்டத்தின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது. அதனை பொருட்படுத்தாத மெஸ்ஸி தொடர்ந்து விளையாடி தனது அணிக்கு வெற்றியை தேடிந்ததுள்ளார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பொதுவாக உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதனை காரணம் காட்டி வீரர்கள் வெளியேறிக்கொள்ளும் வாய்ப்புகளை விளையாட்டு நிர்வாகம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. ஆனால் கணுக்காலில் அடிப்பட்டும் மெஸ்ஸி தொடர்ந்து விளையாடிய காட்சிகளை கண்டு அவரது ரசிகர்கள் ’தி ரியல் பிளேயர்’ என கொண்டாடி வருகின்றனர்.கால்பந்து உலகின் ஜாம்பவானாக கருதப்படுபவர் டீகோ மரடோனா . மெஸ்ஸியை இவருடனே ரசிகர்கள் ஒப்பிடுவது வழக்கம். மறைந்த டீகோ மரடோனா கடந்த 2006 ஆம் அண்டு “ மெஸ்ஸி இந்த உலகின் தலை சிறந்த கால்பந்து வீரர், அவரை பார்க்கும் போதெல்லாம் என்னை பார்ப்பதை போலவே உள்ளது” என பலமுறை பெருமையுடன் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் மெஸ்ஸிதான் எனது கால்பந்து வாரிசு என டீகோ மரடோனா உணர்ச்சிப்பட கூறியதாக செய்திகளும் உண்டு. வயதில் ஹார்மோன் வளர்ச்சி குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த மெஸ்ஸி அதனை தகர்த்து இன்று படைத்திருக்கும் சாதனைகள் ஏராளாம்.
தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்களான நெய்மாரும், மெஸ்சியும் நேருக்கு நேர் மோதுவதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலேயே ஆட்டம் சூடு பிடிக்கும். இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் இந்திய நேரப்படி மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும். இதனை சோனி சிக்ஸ், சோனி டென் ஆகிய சேனல் வாயிலாக நேரடியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.