பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, 2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் மெஸ்ஸி உள்ளார். பார்சிலோனா அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அந்த அணியில் இருந்து விடைப்பெற்று பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 






பி.எஸ்.ஜி அணிக்காக விளையாட இருக்கும் மெஸ்ஸி, தனது ஜெர்ஸி நம்பரை ‘30’ என தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே, அந்த அணிக்காக விளையாடும் பிரபல கால்பந்து வீரர் நேமர், நம்பர் ‘10’ ஜெர்ஸியை வைத்துள்ளார். எனவே, மெஸ்ஸி ‘30’ நம்பரை தேர்வு செய்துள்ளார். இதில், சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், நேமர் தனது ஜெர்ஸி நம்பரை மெஸ்ஸிக்காக விட்டுத்தருவதாக தெரிவித்து ரசிகர்களின் அப்லாஸை அள்ளியுள்ளார். ஆனால், பார்சிலானோ அணிக்காக முதலில் விளையாடியபோதும் மெஸ்ஸி நம்பர் 30-ஐ பயன்படுத்தி உள்ளார். அதானல், பி.எஸ்.ஜி அணிக்காக விளையாட தொடங்கும்போதும் ‘30’ஐ தேர்வு செய்து பயன்படுத்த உள்ளார்.


Sachin | சச்சினோடு நடந்த சம்பவம்.. இந்தியா வரமுடியாதுன்னு பயந்தேன்- மனம்திறந்த சோயப் அக்தர்






பி.எஸ்.ஜி அணியில் விளையாடுவதற்காக மெஸ்ஸிக்கு ஆண்டிற்கு 35 மில்லியன் யூரோ ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக மெஸ்ஸியின் வழக்கறிஞர்கள் மற்றும் மேலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைக்கான உடன்படிக்கை ஏற்படுத்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் தற்போது இரண்டு வருடங்களுக்கு போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட வாய்ப்பும் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 


‛இது வேற மாறி’ - துப்பாக்கி சுடுதலில் மாஸ் காட்டும் தல! - வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!