கால்பந்து உலகில் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர் 2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில்  மெஸ்ஸி உள்ளார். அவர் அந்த அணியுடனான தனது 21 வருட உறவை கடந்த ஜூன் மாதம் முடித்து கொண்டார். பார்சிலோனா அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மீண்டும் அவரை தக்க வைக்க போவதில்லை என்ற  முடிவு எடுக்கப்பட்டது. ஏனென்றால் பார்சிலோனா அணி தற்போது பெரிய நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால் அவர்களால் மெஸ்ஸிக்கு உரிய ஊதியம் அளிக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் மெஸ்ஸியை தற்போது பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் எஃப்சி அணி ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி மெஸ்ஸிக்கு ஆண்டிற்கு 35 மில்லியன் யூரோ ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக மெஸ்ஸியின் வழக்கறிஞர்கள் மற்றும் மேலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைக்கான உடன்படிக்கை ஏற்படுத்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் தற்போது இரண்டு வருடங்களுக்கு போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட வாய்ப்பும் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இன்று மாலை அல்லது நாளை காலை மெஸ்ஸி பாரீஸ் சென்று உடற்தகுதி பரிசோதனை செய்து கொண்ட பின்னர் முறைப்படி அந்த அணியில் இணைவதற்கான விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் எஃப்சி அணி கடந்த 1970ஆம் ஆண்டு முதல் கால்பந்து விளையாட்டில் இருந்து வருகிறது. பிரன்சு நாட்டில் இருக்கும் மிகவும் வெற்றிகரமான கால்பந்து அணிகளில் இது ஒன்றாகும். அங்கு நடைபெறும் உள்ளூர் லீக் போட்டிகளில் 45க்கு மேற்பட்ட பட்டங்களை இந்த அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்சிலோனா கிளப்பில் மெஸ்ஸி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மிகவும் மன வருத்தத்துடன் இருந்த மெஸ்ஸி கண் கலங்கினார்.அப்போது, "இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எனக்கு தற்போது என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. 21 ஆண்டுகளுக்காக இந்த அணியுடன் இருந்த என்னுடைய பந்தத்தை முடித்து கொள்கிறேன். இந்த அணிக்கு என்னுடைய முதல் நாளில் இருந்து தற்போது வரை என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன்.


 






இப்படி ஒரு நாள் வரும் என்று நான்  எண்ணவில்லை. என்னுடைய முழு கால்பாந்து வாழ்க்கையையும் இங்கு செலவழித்த பிறகு இந்த இடத்தை விட்டுச்செல்ல எனது மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. இந்த ஆண்டு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்காமல் என்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிடப்போகிறேன்" எனக் கூறினார். 


மேலும் படிக்க: 'மன்னிப்பு கேட்டார்' - கஜகஸ்தான் வீரர் கடித்த விவகாரம்.. மனம் திறந்த ரவிக்குமார்