இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, களமிறங்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்திய அணியில், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் டாம் குரான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வுட் இடம்பெற்றுள்ளார்.
தொடர் சமநிலையில் உள்ளதால், இரு அணி வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என தெரிகிறது.