1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் கபில் தேவ், ஒரு வீரர் நாட்டுக்காக விளையாடும்போது அழுத்ததை உணர்ந்தால், நீங்கள் விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார், கபில் தேவ் தெரிவித்த இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அது தற்போது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 


இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் தொடர்ந்து பல தொடர்களில் விளையாடி வருகின்றனர். இதனால் ஏற்படும் அழுத்ததால் சீனியர் வீரர்கள் சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து கொள்கிறார்கள். மேலும், இதை கருத்தில்கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கும் ஓய்வு அளித்து வருகிறது. 


இந்தநிலையில், கொல்கத்தா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில்தேவ், சீனியர் வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு குறித்து கடுமையாக சாடியுள்ளார். அதில், “கடந்த சில நாட்களாகவே நான் அதிகம் கேட்கும் வார்த்தை அழுத்தம். நாங்கள் ஐபிஎல் விளையாடுகிறோம், இதனால் எங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. 






எதற்கு அழுத்தம்..? 


இந்த வார்த்தை ரொம்ப சர்வசாதாரணமா.. அவங்களுக்கு நான் 'விளையாடாதே'னு சொல்றேன்.யாருன்னு கேக்கறது. பிரஷர் இருக்கு.  நீங்கள் நாட்டுக்காக விளையாடுகிறீர்கள் அது எப்படி அழுத்தமாக இருக்கும். அது எப்படி சாத்தியம்? 100 கோடி நாட்டில், 20 பேர் விளையாடுகிறீர்கள், பிறகு உங்களுக்கு அழுத்தம் இருப்பதாகச் சொல்கிறீர்களா? மாறாக, இது ஒரு பெருமைக்குரிய விஷயம், நீங்கள் மக்களிடமிருந்து மிகவும் அன்பைப் பெறுகிறீர்கள். அந்த பெருமையை எடுத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். 


அழுத்தம் என்பது ஒரு அமெரிக்க வார்த்தை. நீங்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்றால் வேண்டாம் 
உங்களை யாரும் கட்டாயப்படுத்துகிறார்களா?. வாழைப்பழ கடை திறங்கள். முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை ஏன் அழுத்தமாக எடுத்துக்கொள்கிறீர்கள், அதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்டு வேடிக்கையாக இருங்கள்.






இந்திய வீரர்கள் தங்கள் வேலையை நேசிக்க வேண்டும். நீங்கள் தங்கள் வேலையை முழு மனதுடன் செய்தால் விஷயங்கள் எளிதாகிவிடும். நீங்கள் அதைச் செய்யத் தொடங்கும் நாளில், வேலை எளிதாக இருக்கும். ஆனால் அதே விஷயத்தை நீங்கள் அழுத்தம் என்று அழைத்தால், அதில் எந்த நல்லதும் நடக்காது” என தெரிவித்தார்.