ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி வெள்ளி வென்றுள்ளார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிநாளான இன்று போட்டிகள் நிறைவடைந்தன. இதில் மகளிருக்கான தடை தாண்டும் 200 மீட்டர் இறுதிப்போட்டியில் பிரிவில் பந்தைய தூரத்தை 23.13 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
தங்கம்
மகளிருக்கான தடை தாண்டும் இறுதிப்போட்டியில் 100 மீட்டர் பிரிவில் பந்தைய தூரத்தை 13.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றுள்ளார்.
யார்ராஜியின் தேசிய அளவிலான அதிகபட்ச சாதனை பந்தய இலக்கை 12.82 நொடிகளில் கடந்திருந்தார்.புதன்கிழமை. ஆடவர் பிரிவில் பத்தாயிரம் மீட்டர் தூரம் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க பட்டியல் கணக்கை தொடங்கியிருந்தார்.
யார் இந்த கோதி யார்ராஜி?
ஆந்திரபிரதேச மாநிலத்தின் விசாப்பட்டினம் பகுதியில் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட்,28 -ல் பிறந்தவர். இவர் தந்தை இரவு நிறுவனங்களின் பாதுகாவலராகவும், தாய் குமாரி நகர்புற மருத்துவமனையில் பகுதிநேர உதவியாளராக பணியாற்றிவர். சாதாரண குடும்பத்தில் இருந்து மிளர்ந்தவர் தனது திறமையால் இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த்துள்ளார். கோழிக்கோடு நகரில் நடைபெற்ற ஃபெடரேசன் கப் போட்டியில் ஜோதி யார்ராஜி 13.09 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து புதிய சாதனை படைத்திருந்தார். இருந்தாலும், அந்த சாதனை அதிகாரப்பூர்வாம அங்கீகரிக்கப்படவில்லை. ஏனெனில், ஓடும்போது,தேசிய சாதனைக்கு +2m/s வேகம் தேவை. ஆனால், அவர் +2.1m/s காற்றின் வேகம் இருந்தது. இது குறித்து அவர் கூறுகையில்,” இந்தியாவில் கை துப்பாகிகள் பயன்படுத்தி போட்டியை தொடங்குவார்கள். ஆனால், ஐரோப்பாவில் எலக்ட்ரானிக் ஸ்டாட்டர் பயன்படுத்துவார்கள். இது பற்றிய அனுபவம் இல்லாததால்,போட்டி தொடங்கியதை நான் அறியவில்லை.” என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ்ஸில் பாருல் சவுத்ரி தனிப்பட்ட முறையில் சிறந்த சாதனை படைத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் , அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள கான்டினென்டல் டூர் தங்க பதக்கத்திற்கான போட்டியில் பந்தயத்தை 9 நிமிடங்கள் 29.51 வினாடிகளில் நிறைவு செய்தார்,. இது அவர் கடந்த ஆண்டு அவர் சாதித்த 9 நிமிடங்கள் 38.29 வினாடிகளில் தனது முந்தைய சிறந்த சாதனையை முறியடித்தார்.
இந்தியா மூன்றாம் இடம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் பதக்கப்பட்டியலில் இந்தியா 6 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் எப மொத்தம் 27 பதக்கங்கள் வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் 16 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் என 37 பதக்கங்கள் வென்று ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. சீனா 8 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இலங்கை, கத்தார்,பிலிஃபைன்ஸ்,சிங்கப்பூர், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தமிழ்நாடு வீரர் வெற்றி
ஆசிய தடகள சாம்பியம்ஷிப் தொடரில் 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாடு வீரர் சந்தோஷ் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இது இந்தியாவிற்கு 10 வது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் சந்தோஷ் குமார் 49.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் சந்தோஷ் குமார் 49.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிற்கு தகுதி:
ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற கேரளாவை சேர்ந்த முரளி ஸ்ரீஷங்கர் 8.37 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது வாழ்நாளில் அவர் தாண்டிய இரண்டாவது அதிகப்படியான நிளம் இதுவாகும். முன்னதாக, 8.41 மீட்டர் தூரம் தாண்டியது அவரது தனிநபர் சிறப்பான நீளம் தண்டுதலாக உள்ளது. இதனிடையே, சீன தைபேயின் யு டாங்-லின் 8.40 மீட்டர் தூரம் தாண்டி தங்கத்தை கைப்பற்றினார். அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற, குறைந்தது 8.27 மீட்டர்கள் தாண்ட வேண்டியது கட்டாயம். ஆனால், 8.37 மீட்டர் தூரம் தாண்டியதன் மூலம் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்க முரளி ஸ்ரீஷங்கர் தகுதி பெற்றுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் முரளி ஸ்ரீஷங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.