திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை குறித்து EVI ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் பிரேமானந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “VOOKI வழங்கும் ஜேபிஎல்- தமிழ்நாடு ஜூனியர் பேட்மிண்டன் வீரர்களுக்கு ஒரு பெரும் வரமாக அமையவிருக்கும். மேலும் வூக்கி வழங்கும் ஜூனியர் பேட்மிண்டன் லீக், முதல் பேட்மிண்டன் லீக் தமிழ்நாடு அளவில் ஜூனியர் வீரர்களுக்கான பிரத்யேக தளமாகும். குறிப்பாக ஜூனியர் பேட்மிண்டன் லீக், விளையாட்டை பிரபலப்படுத்துவதற்காக யூரோ ஸ்போர்ட்ஸ் டிவி ஒளிபரப்புகிறது. மேலும் ஜியோ சினிமாவில் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகிறது. தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 19 வயது வரை ஜூனியர்களுக்கான களமாக இந்த லீக் அமைந்திருக்கும். இந்த போட்டிகாக அனைத்து வீரர்களும் நவம்பர் 2022 இல் துபாயில் ஏலம் விடப்பட்டனர். மேலும் JBL-சீசன் 2 இப்போது 88 வீரர்களுடன் பெரியதாகவும் சிறப்பாகவும் உள்ளது, 8 Franchisee அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ரெயின்போ ராக்கர்ஸ் , திருச்சி தமிழ் வீரர்கள், திருவாரூர் டெல்டா கிங்ஸ் , விருதை வெங்கைஸ், கோவை சூப்பர் கிங்ஸ், சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், தஞ்சை தலைவாஸ், மதுரை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கலந்துகொள்கிறது.
மேலும், JBL - சீசன் 2 போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. லீக்கின் தொடக்க விழா 12 ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு டாக்டர். ஆர். அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு பூப்பந்து சங்கத்தின் தலைவர் வி. அருணாசலம் உறுப்பினர், செயற்குழு BAI & தமிழ்நாடு பூப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் 13, 14,15 வரை போட்டிகள் நடைபெறும்” என்றார். குறிப்பாக JBL இன் பிராண்ட் அம்பாசிடர் ஸ்ரீ.ஜி.வி.பிரகாஷ் (நடிகர் மற்றும் இசையமைப்பாளர்) நிகழ்வின் இறுதி நாள் அன்று பங்கேற்கிறார். இந்த தளம் ஜூனியர் வீரர்களுக்கு மன உறுதியை உருவாக்கி தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளியை வெல்வதற்கு அவர்களை ஊக்குவிக்கும் என தெரிவித்தார். மேலும் வெற்றி பெரும் அணிக்கு பரிசுதொகையாக 70 லட்சம் வழங்கப்பட உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்