சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் (ISSF) ஜூனியர் உலகக் கோப்பை கடந்த மே 9 ம் தேதி ஜெர்மனியில் உள்ள சுஹ்லில் தொடங்கியது. இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் இந்திய அணிக்கு ஏஸ் ஷூட்டர்களான மனு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் தலைமை தாங்கினர்.
அனிஷ் பன்வாலா, நாம்யா கபூர், விவான் கபூர், உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் போன்ற துப்பாக்கி சுடும் வீரர்கள் உட்பட ஜெர்மன் உலகக் கோப்பைக்கான 51 துப்பாக்கி சுடும் வீரர்களை இந்திய தேசிய ரைபிள் சங்கம் (என்ஆர்ஏஐ) தேர்வு செய்து அனுப்பி வைத்தது.
இந்தநிலையில், ஜெர்மனியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ஜுனியர் துப்பாக்கிச்சுடும் போட்டியில், இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றது. கடந்த வியாழக்கிழமை நடந்த 10M ஏர் பிஸ்டல் ஆண்கள் பிரிவில் ஈஷா சிங் மற்றும் சௌரப் சௌத்ரி 16-12 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று தங்கம் வென்றனர். அதே பிரிவில் பாலக் மற்றும் சரப்ஜோத் சிங் வெள்ளி பதக்கம் வென்றனர்.
அதேபோல், பெண்களுக்கான 10M ஏர் பிஸ்டல் பிரிவில் போலந்தின் ஜூலியா பியோட்ரோவ்ஸ்கா மற்றும் விக்டர் சஜ்தாக் ஆகியோரிடம் 13-17 என்ற கணக்கில் தோல்வியடைந்து இந்திய அணியை சேர்ந்த ரமிதா மற்றும் பார்த் மகிஜா வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
மொத்தமுள்ள 12 பதக்கங்களில், நாள் முடிவில் இந்தியாவின் எண்ணிக்கை மூன்று தங்கம் மற்றும் நான்கு வெள்ளி என பாதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்