ஈ சாலா கப் நமதே - 2வது முறை டபுள்யூபிஎல் கோப்பையை வென்று ஆர்சிபி அசத்தல்

Continues below advertisement

டபுள்யூபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.

மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஜெமிமா மற்றும் ஹென்ரியின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Continues below advertisement

வதோதராவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்மிருதி மந்தனா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

லிசெல் லீ அதிரடி:

அதன்படி டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக லிசெல் லீ மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினார், முதல் மூன்று ஓவர்களில் பொறுமையை காட்டிய இந்த ஜோடி நான்காவது ஓவரில் அதிரடியை தொடங்கியது. சயாலியின் ஓவரின் 20 ரன்கள் எடுத்தது, முக்கியமாக லிசெல் லீ ஆர்சிபி பவுலர்களுக்கு தண்ணீக்காட்டினார். பவர்பிளேவின் கடைசி ஓவரில் அருந்ததி பந்துவீச்சில் 20 ரன்களுக்கு ஷாபாலி ஆட்டமிழந்தார். அடுத்தாக களம்கண்ட லாரா வோல்வார்ட் தனது முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடங்கினார். 

கேப்டன் ஜெமிமாவின் சரவெடி: 

சிறப்பாக ஆடிய லிசெல் லீ 36 ரன்களில் டி கிளர்க் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழ்ந்தார், நான்காவது வீராங்கனையாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் எந்த வித நெருக்கடியும் தனது பேட்டிங்கை தொடங்கினார். அவரும் லாரா வோல்வார்ட்டும் ஓவருக்கு ஒரு பவுண்டரிகள் அடிக்க டெல்லி அணியின் ரன்ரேட் 9-க்கு கீழ் குறையாமால் இருந்தது. ஜெமிமா 32 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்தார். 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் இந்த ஜோடி சேர்த்த நிலையில் ஜெமிமா சயாலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஹென்ரி கொடுத்த அதிரடி கேமியோ: 

ஜெமிமாவின் விக்கெட்டுக்கு பிறகு சிறிய கம்பேக் தரலாம் என்று முயன்ற ஆர்சிபி பவுலர்களுக்கு சினெல்லே ஹென்றி கட்டையை போட்டார் என்று சொல்லலாம், 19வது ஓவரை வீசிய டி கிளார்க்கின் ஓவரில் டெல்லி அணி 24 ரன்களை சேர்த்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் சேர்க்க டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தல்

இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி 19.4 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 87 ரன்கள், ஜார்ஜியா வால் 79 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். டெல்லி அணியை தொடர்ந்து 4வது முறையாக கோப்பையை தவறவிட்ட நிலையில், ஆர்சிபி இரண்டாவது முறையாக டபுள்யூபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

 

2024 இல் மகளிர் ஆர்சிபி, 2025 இல் ஆண்கள் ஆர்சிபி அணி, மறுபடியும் 2026இல் மகளிர் அணி கோப்பையை வென்றதன் மூலம் ஒட்டுமொத்த ஆர்சிபி அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.